“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.” – 1 யோவாண் 4:10-11
ஒவ்வொருவரும் நேசிக்கப்படவும், ஏற்றுக்கொள்ளப்படவும் விரும்புகிறோம். ஆனால் நம்மில் அநேகர் தவறான வழிமுறையில் சந்தோசத்தை கண்டுபிடிக்க முயலுகிறோம். நாம் பெற்றுக் கொள்வதிலே அதை கண்டுபிடிக்க முயலுகிறோம். ஆனால் கொடுப்பதிலே அது காணப்படுகிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மிகவும் அற்புதமான ஈவு தேவனுடைய அன்பாகும். அது நம்மிடமாக பாய்ந்து வந்தால், நம்மிடமிருந்து பிறரிடமாக பாய்ந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அது தேங்கி விடும்.
அன்பு கொடுக்கவேண்டும். ஏனென்றால் அது அதன் தன்மையாகும். 1 யோவான் 4:11, நாம் பெற்றுக்கொள்ளும் அன்பை எப்படி கொடுப்பது என்பதை மேற்கோளிட்டுக் காட்டுகிறது. பிரியமானவர்களே, தேவன் நம்மை இவ்வளவு அன்பு கூறுகிறார் என்றால் நாமும் ஒருவரிலொருவர் அன்பு கூற வேண்டும்.
தேவனுடைய உண்மையான அன்பில் வாழ்வதென்பது ஒரு நடைமுறையா கும். முதலாவதாக, தேவன் நம்மை நேசிக்கிறார். விசுவாசத்தால் அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறோம். பின்னர் நாம் நம்மை ஒரு சமநிலையோடு நேசிக்கின்றோம். தேவனுக்கு அன்பை திரும்ப கொடுக்கிறோம். மற்றவர்களை நேசிக்க கற்றுக் கொள்கிறோம்.
அன்பு இந்த முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அது முழுமையடைவதில்லை. தேவனுடைய அன்பு இருக்கும் போது அதை நாம் கொடுக்கலாம். நாம் பிறரை அளவுக்கதிகமாக நேசிப்பதை தெரிந்துகொள்ளலாம். தேவன் நம்மை நேசிப்பது போலவே நாமும் அவர்களை ஆழமாகவும், நிபந்தனையற்றும் நேசிக்கலாம்
ஜெபம்
தேவனே, உம்முடைய அன்பு என்னில் தேங்கிவிட நான் விரும்பவில்லை. உம் அன்பை நான் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பிறரை அளவுக்கதிகமாக நேசிக்க தெரிந்து கொள்வதின் மூலம், அந்த செயல்முறையை முழுமையாக உதவும்.