உதவி இதோ இங்கே

உதவி இதோ இங்கே

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான் 14:16)

அநேகர் இயேசுவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பரலோகத்திற்குச் செல்வார்கள், ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுத்த ஆவியின் முழு வல்லமையைப் பெறவோ அல்லது பூமியில் அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் விரும்பும் உண்மையான வெற்றியை அனுபவிக்கவோ மாட்டார்கள். எளிமையாகச் சொன்னால், பலர் பரலோகத்திற்குச் செல்வார்கள், ஆனால் அதற்கான அவர்களுடைய பயணத்தை அனுபவிக்க மாட்டார்கள்.

செல்வம், பதவி, அதிகாரம் உள்ளவர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம், அவர்களை “வெற்றி பெற்றவர்கள்” என்று கருதுகிறோம். ஆனால் வெற்றிகரமானவராகக் கருதப்படும் பலருக்கு இன்னும் சமாதானம், மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் பிற உண்மையான ஆசீர்வாதங்கள் இல்லை. அத்தகையவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையை முழுமையாகச் சார்ந்திருக்கக் கற்றுக் கொள்ளவில்லை.

தன்னிறைவு பெற்றவர்கள் பெரும்பாலும், கடவுளைச் சார்ந்திருப்பது பலவீனத்தின் அடையாளம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் சொந்த பலத்தில் செய்வதை விட அதிகமாக தங்கள் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

நம்மிடம் பலம் இருந்தாலும், பலவீனங்களும் உள்ளன, அவருடைய உதவி நமக்குத் தேவைப்படும் விதத்தில் கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். அவர் நமக்கு உதவ விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் நமக்குள் வாழ ஒரு தெய்வீக உதவியாளரான பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்.

நமக்கு வேண்டிய உதவிகள் கிடைக்காததால், நாம் அடிக்கடி தேவையில்லாமல் போராடுகிறோம். உங்கள் சொந்த பலத்தில் அல்ல, அவரைச் சார்ந்திருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எதை எதிர்கொண்டாலும், நீங்கள் தனியாக செல்ல வேண்டியதில்லை.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் இல்லாத உங்கள் சிறந்த நாளை விட, கடவுளுடன் உங்கள் மோசமான நாள் சிறப்பாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசவும், இன்று உங்களுக்கு உதவி தேவைப்படும் எல்லா வழிகளிலும் உங்களுக்கு உதவவும் இருக்கிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon