“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” – யோவான் 3:3
உங்கள் விசுவாசத்தை பற்றி நீங்கள் பிறரிடம் சொல்லும்போது அவர்களுக்கு மதத்தை கொடுக்கிறீர்களா? அல்லது உறவை கொடுக்கிறீர்களா?
நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது (யோவான் 3:1-8) நாம் மதம் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறதில்லை. துரதிஷ்டவசமாக அனேக வேளைகளில் மக்கள் சுவிசேஷத்தை ஒரு பக்தி சார்ந்த பட்டியலாக கொடுக்கின்றனர் ஊழியர்களுடனான ஒரு உண்மையான உறவை அல்ல.
ஒருவர் உங்களிடம் நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள்? என்று கேட்டால், நாம், நான் இந்த சபைக்கு செல்கிறேன் என்று சொல்வதற்கு பதிலாக, நாம் இயேசுவுடன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவை பற்றி பேச வேண்டும்.
“கிறிஸ்தவ விதிகளை பின்பற்றுவதால், ஆலயத்திற்கு செல்வதால் மட்டுமே நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடலாம் என்பது, கார் நிறுத்துமிடத்தில் அமர்ந்துகொண்டால் கார் ஆகிவிடலாம் என்பது போன்றதாகும்.
மதம் / பக்தி சார்ந்த விதிகள் கடினமானதாகவும், கொடூரமானதாகவும், அழுத்தத்தை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இயேசு தம் மக்களுக்காக விரும்புவது அதுவல்ல. இயேசு தம் மக்கள் அவருடன் ஒரு வாழும் உறவிலே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அந்த கேள்விக்கு நான் எப்படி பதில் அளிக்க விரும்புகிறேன் என்றால், “கேட்டதற்காக நன்றி எனக்கு எந்த மதமும் இல்லை ஆனால் என்னிடம் இயேசு இருக்கிறார்.”
நாம் மக்களிடம் இயேசுவை உங்களுக்கு தெரியுமா? அவர் உங்களுடைய நண்பரா? அவரோடு உங்களுக்கு ஒரு தனிப்பட்ட உறவு இருக்கின்றதா என்று நாம் கேட்க தொடங்க வேண்டும்.
அடுத்தமுறை யாராவது உங்களிடம், உங்கள் விசுவாசத்தை பற்றி கேட்டால் அவர்களிடம் பக்தியை அல்ல உறவை கொடுக்கவேண்டும்.
ஜெபம்
தேவனே, ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஒருவர், விதி பட்டியலை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் கண்ணிக்குள் விழுவது சுலபமானது. ஆனால் என்னிடமிருந்து அத்தகைய விசுவாசத்தை நீர் விரும்புவதில்லை. பிறரை உம்முடன் வாழ்க்கையை மாற்றும் உறவுக்குள்ளாக நடத்தும் வகையில் உம் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள என்னை பெலப்படுத்துவீராக.