“உள்ளே” ஆனால் “இல்லை”

"உள்ளே" ஆனால் "இல்லை"

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. (யோவான் 17:14)

இன்றைய வசனம், விசுவாசிகளாக நாம் உலகில் இருக்கிறோம், ஆனால் உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நமக்குக் கற்பிக்கிறது. அதாவது காரியங்களை உலகப் பார்வையில் நம்மால் எடுக்க முடியாது. நமது வழிகளிலும், மனப்பான்மையிலும் உலகத்தாரை போல் மாறாமல் இருப்பதற்கு, நிலையான விழிப்புணர்வு அவசியம். இந்த உலகில் நடப்பது போல, பொழுது போக்கின் வடிவில் அதிகப்படியான வன்முறையைப் பார்ப்பது, நம் மனசாட்சியைக் கெடுக்கலாம் அல்லது கடினப்படுத்தலாம் மற்றும் கடவுளின் சத்ததுக்கான நமது உணர் திறனைக் குறைக்கலாம். இன்று உலகில் உள்ள பலர் தொலைக்காட்சியில், அடிக்கடி சித்தரிக்கப்படும் துயரங்களைப் பார்ப்பதால், உண்மையான மக்கள் படும் வேதனைகளுக்கு உணர்ச்சியற்றவர்களாக உள்ளனர்.

செய்தி ஊடகங்கள் அடிக்கடி எதிர்மறையான அறிக்கைகள் அல்லது சோகமான கதைகளை உணர்ச்சியற்ற வழிகளில் வழங்குகின்றன. மேலும் இவற்றை நாம் அடிக்கடி பார்க்கிறோம், கேட்கிறோம். பல பயங்கரமான விஷயங்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். அதனால் சோகமான காரியங்களுக்கு இனி நம்மால் இரக்கம் அல்லது பொருத்தமான உணர்ச்சிகளைக் காட்ட முடிவதில்லை.

இந்த காரியங்கள், இந்த உலகத்திற்காய் சாத்தான் வடிவமைத்திருக்கும் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதி என்று நான் நம்புகிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் பயங்கரமான சம்பவங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும்போது, நாம் கடின மனதுடையவர்களாகவும், உணர்ச்சி வசப்படாமல் இருக்கவும் அவன் விரும்புகிறான். இப்படிப்பட்ட காரியங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதை அவன் விரும்பவில்லை. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் கவலைப்பட வேண்டும், உணர வேண்டும், ஜெபிக்க வேண்டும். உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் கேட்கும் போதெல்லாம், நாம் கடவுளிடம் அவருடைய கண்ணோட்டத்தைக் கேட்க வேண்டும். மேலும் நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று விசாரிக்க வேண்டும். நாம் அவருடைய பதிலைக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும். நாம் உலகில் இருக்கும் போது செல்ல வேண்டிய வழி, ஆனால் உலகத்திற்குள் இல்லை.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: தெய்வீக மதிப்புகளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுங்கள், ஒருபோதும் சமரசம் செய்யாதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon