
“அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.” – எபே 3:12
தேவன், அவருடைய கிருபாசனத்தண்டைக்கு பயமின்றியும், உறுதியாகவும், தைரியமாகவும் வர அனுமதி கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே எபே 3:12 லே தாராளமாக அவரை கிட்டி சேர உற்சாகப்படுத்தப்படுகிறோம். கிறிஸ்துவுடன் நாம் கொண்டிருக்கும் உறவால், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் நம் ஆவியிலே நம்முடனே இருக்கிறார். இந்த வேத வாக்கியம் சொல்வதாவது, நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதால், தேவன் நம்மை எந்நேரமும் நேசிக்கிறார், ஏற்றுக் கொள்கிறாரென்று உறுதியுடன் இருக்கலாம். அவருடைய உதவியும், மன்னிப்பும் நமக்கு தேவைப்படும் போது அதை அவர் இலவசமாக நமக்கு கொடுக்கிறார். நமக்கு தேவைப்படும் எல்லாவற்றிற்காகவும் அவரை அணுகலாம்.
ஒரு நாளைக்கு 200 முறை வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் அவரிடம் செல்லும் சிலாக்கியம் நமக்குள்ளது. தேவன், நாம் கதவை தட்டி உள்ளே வர வேண்டும் என்று கூட சொல்லவில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், கதவைத் தட்ட வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை. ஏனென்றால் இரவோ, பகலோ எந்த நேரத்திலும் நீங்கள் வரலாம் என்று சொல்லும் ஒரு நண்பர் இருப்பதைப் போன்று எண்ணிக் கொள்ளுங்கள்.
இப்போது இவ்வாறாக யோசித்துப் பாருங்கள்…. தேவன் இவ்வாறு உங்களிடம் சொல்கிறார். நீங்கள் ஜாக்கிரதையாகவோ, தயக்கத்துனோ, வரவேற்கப்படுவோமோ இல்லையோ என்று எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியென்றால் நீங்கள் தவறுகள் செய்தாலும் அல்லது நீங்கள் செய்யக்கூடாத சில காரியங்களை செய்திருந்தாலும், உங்கள் பாவத்திற்காக நீங்கள் மனந்திரும்பி இயேசுவின் இரத்தத்தாலே சுத்திகரிக்கப்பட்டு அவருடைய பிரசன்னத்திற்குள் தைரியமாக செல்லக்கூடும் என்பதாகும்.
ஜெபம்
தேவனே, எந்நேரத்திலும் நான் உம்மிடம் வரலாம், என்னுடன் நீர் எப்போதுமே இருக்கிறீர் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த சிலாக்கியத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னை உம்மிடம் வரும் படி உற்சாகப்படுத்தியதற்காக உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.