“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” – 1 பேதுரு 5:8
தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், ஆனால் பிசாசும் உங்களுக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறான். இதன் விளைவாக, நாம் நல்ல சம நிலையோடு, தெளிந்த மனம், இச்சையடக்கம் உள்ளவர்களாய் விழித்திருக்கிறவர்களாக எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க.வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
இச்சையடக்கம் என்றால் ‘ஒழுக்கத்துடன், தெளிந்த மனம் என்றால்’ கருத்தாக’விழிப்புடன் என்றால் ‘தீர்மாணத்துடன்’ கவனமாக என்றால் ‘ஜாக்கிரதையுடன்’ இருக்க வேண்டும்.
நாம் எல்லா நேரங்களிலும் இப்படி வாழ வேண்டும். அது முக்கியம்.
ஆனால் எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தீவிரமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில், எதிரி தாக்கும் ஒரு பகுதியை கடவுள் உங்களுக்குக் காண்பிக்கும் போதெல்லாம், அது உட்கார்ந்து எதுவும் செய்யாமல் இருக்க வேண்டிய நேரம் அல்ல. தீவிரமாகி சாத்தானுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் அது.
நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஜெயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். எதிரியின் திட்டத்திற்கு நாம் அடிமையாக வாழ வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய இப்போதே முடிவு செய்யலாம். கடவுளுடன் தீவிரமாக நடந்து, பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைப் பின்பற்றி எதிரிக்கு எதிராக நில்லுங்கள்.
உங்கள் வாழ்க்கைக்கான கடவுளின் திட்டத்தை பின்பற்ற இன்று தேர்வு செய்யுங்கள், சாத்தானின் திட்டத்தை அல்ல. ஒவ்வொரு காரியத்திலும் எதிரியை தோற்கடிப்பீர்கள்.
ஜெபம்
தேவனே, நான் உம்முடைய திட்டத்தை தெரிந்து கொள்ளுகிறேன், எதிரியின் திட்டத்தை அல்ல. அவன் என்னைத் தாக்கும் பகுதிகளை எனக்குக் காட்டி, அவனை தோற்கடிக்க, என்னை வழி நடத்தும்.