என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். (சங்கீதம் 62:5)
விசுவாசம் அவருக்குப் பிரியமாயிருப்பதால், நாம் அவரை நம்பி, விசுவாசித்து, விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது, அவருடைய வல்லமை வெளியாகிறது. எதிர்பார்ப்பு என்பது நம்பிக்கையின் ஒரு பண்பு ஆகும். அது அதனுடைய வல்லமையைக் கொண்டுள்ளது – நம்பிக்கையின் வல்லமை. விசுவாசம், ஆவிக்குறிய மண்டலத்திற்கு சென்று, இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளுடைய வல்லமையைக் காண்பிக்கவும், பூமியில் எந்த நபரும் செய்ய முடியாததைச் செய்யவும் எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது. மறுபுறம்,சந்தேகம் நல்லது எதுவும் நடக்காது என்று பயப்படுகிறது; அது கடவுளைப் பிரியப்படுத்தாது மற்றும் அது அவர் ஆசீர்வதிக்கக்கூடிய ஒன்றல்ல. நாம் சந்தேகத்துடனும், ஏமாற்றத்துடனும், கடவுள் நம்பிக்கையின்மையுடனும் வாழும்போது வல்லமையற்றவர்களாக இருக்கிறோம்.
ஆண்டவர் உங்களுக்காக வருவார் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பாத ஒரு நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் மிகவும் வல்லமை வாய்ந்த ஜெபங்களை ஜெபிக்க முடியவில்லை, இல்லையா? உங்கள் இருதயம் கடவுளை முழுமையாக நம்பிய ஒரு நேரத்தை இப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்காக வருவார் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்கள். அப்போது உங்களால் ஒரு குறிப்பிட்ட உணர்வுடன் ஜெபிக்க முடிந்தது, இல்லையா? அதுதான் ஜெபத்தில், எதிர்பார்ப்பின் வல்லமை. நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் காரியங்கள் சரியாக நடக்கவில்லையென்றாலும், எது சிறந்தது என்பதை அறிய ஆண்டவரை நம்புங்கள், மேலும் அவர் பெரிய காரியங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்வார் என்று எதிர்பார்த்து தைரியமாக ஜெபம் செய்யுங்கள்.