
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும். (எபிரெயர் 10:19-20)
இயேசு மரித்த போது, பரிசுத்த ஸ்தலத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரித்த ஆலயத் திரை, மேலிருந்து கீழாகக் கிழிந்தது (மாற்கு 15:37-38ஐப் பார்க்கவும்).
அது கடவுளின் பிரசன்னத்திற்குள் செல்ல எல்லோருக்கும் ஒரு வழியைத் திறந்தது. இயேசுவின் மரணத்திற்கு முன்பு, பிரதான ஆசாரியர் மட்டுமே கடவுளின் முன்னிலையில் செல்ல முடியும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொல்லப்பட்ட விலங்குகளின் இரத்தத்துடன், அவரது பாவங்களையும், மக்களின் பாவங்களையும், மறைத்து பரிகாரம் செய்ய முடியும்.
கோயிலின் திரைச்சீலை கிழிந்தது, மேலிருந்து கீழாக என்பது குறிப்பிடத்தக்கது. திரை மிக உயரமாகவும், தடிமனாகவும் இருந்தது, அதை எந்த மனிதனும் கிழித்திருக்க முடியாது – அது கடவுளின் வல்லமையால் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக கிழிந்தது. இது அவர் தம் மக்கள் தம்மை அணுகுவதற்கு ஒரு புதிய மற்றும் உயிருள்ள வழியைத் திறக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
ஆரம்பத்திலிருந்தே, கடவுள், மனிதனுடன் ஐக்கியம் கொள்ள விரும்பினார்; அதுவே நம்மை உருவாக்கியதன் நோக்கம். அவர் தனது பிரசன்னத்திலிருந்து மக்களை மூட விரும்பவில்லை, ஆனால் அவரது பரிசுத்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, அது அருகில் வரும் புனிதமற்ற எதையும் அழிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, பாவிகள் முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்கான வழி, கடவுளின் பிரசன்னத்தை, மனிதன் அணுகுவதற்கு முன்பே வழங்கப்பட வேண்டும்.
நாம் உலகில் இருக்கிறோம், ஆனால் நாம் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடாது (யோவான் 17:14-16 ஐப் பார்க்கவும்). நமது உலகியல் மற்றும் பூமிக்குரிய வழிகள் கடவுளின் பிரசன்னத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. மேலும் அது நம்மை அவருடைய சத்தத்தைக் கேட்க விடாமல் தடுக்கலாம். நம்மைச் சுத்தமாக வைத்திருக்க, இயேசுவின் இரத்தத்தின் பலியை விசுவாசத்தினால் நாம் தொடர்ந்து பெற்றுக் கொள்ளா விட்டால், நாம் நெருக்கத்தை அனுபவித்து, கடவுளோடு சரியான ஐக்கியத்திற்குள் வர முடியாது.
இன்று உங்களுக்கான தேவனுடைய வார்த்தை: தேவன் உங்களுடன் ஐக்கியம் கொள்ள விரும்புகிறார்; இன்று சுதந்திரமாக அவரது முன்னிலையில் நுழையுங்கள்.