
“ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” – யாக் 4:7
அனேக கிறிஸ்தவர்கள் ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக் கொள்ளாத படியால் சோர்வடைந்தும், மனம் முறிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் இப்படியாக ஏமாற்றத்திலும், மனசோர்விலும் வாழ்வது தேவனுடைய சித்தமாக இருப்பதில்லை.
இந்த உலகிலே இயேசுவின் ஊழியத்தின் ஒரு பகுதி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலே, பிசாசினால் ஒடுக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதாகவே இருந்தது. இயேசுவின் வல்லமையை சந்தித்த போது ஏமாற்றமடைந்தவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டனர். இதே வல்லமையை நாமும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வல்லமையைப் பயன்படுத்தி, தேவன் பேரிலே நோக்கமாயிருப்பதாலும், அவருடைய வாக்குத்தத்ங்களை தியானிப்பதாலும், அவருடைய வார்த்தைகளை அறிக்கையிடுவதாலும், ஜெபத்திலே உங்களையும், உங்கள் சூழ்னிலையையும் அவரிடம் அளிப்பதின் மூலமாகவும் உங்களை ஏமாற்றத்தினின்று தற்காத்துக் கொள்ளுங்கள். இயேசுவின் மூலமாக உங்களை மனமடியச் செய்ய முயலும் எதிரியின் முயற்சியை எதிர்த்து போராடலாம். அவன் உங்களை அழிக்காதபடி அவனை கடிந்து கொள்ளலாம்.
பிசாசு உங்களிடமாய் நெருங்கி வரும் போது, அவன் என்ன செய்ய முயற்சிக்கிறானென்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு, உங்கள் ஆவியிலே தேவனுடன் இணக்கமாக இருங்கள். அவனை எதிர்த்து, அவன் உங்களை விட்டு ஓடும் படி செய்யுங்கள். இயேசு உங்களுக்கு கொடுத்திருக்கும் வல்லமையால், அவன் உங்களை விட்டு ஓடுவதை தவிர வேறெதும் செய்ய இயலாது.
ஜெபம்
தேவனே, பின்னடைவுகளும், சோர்வுறச் செய்யும் காரியங்களும் என் வழியே வரலாம். ஆனால் நான் ஏமாற்றமடைய மாட்டேன். நான் உம்முடன் இணக்கமாக இருப்பதால், ஒவ்வொரு முறையும் பிசாசை எதிர்த்து அவனை விரட்டி விடுவேன்.