ஐக்கியம்: இரகசிய இடம்

ஐக்கியம்: இரகசிய இடம்

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசியர் 2:5)

கடவுளோடு ஐக்கியம் கொள்வது நமக்கு வாழ்க்கையை வழங்குகிறது. அது நம்மை புதுப்பிக்கிறது; அது நமது பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது. நாம் கடவுளுடனான ஐக்கியத்தின் மூலம் பலப்படுத்தப்படுகிறோம்—நம் ஆத்துமாவைத் தாக்கும் எதிரியின் தாக்குதல்களைத் தாங்கும் அளவுக்கு பலமாக இருக்கிறோம் (எபேசியர் 6:10-11 பார்க்கவும்).

நாம் கடவுளுடன் ஐக்கியம் கொள்ளும் போது, எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படும் ஒரு இரகசிய இடத்தில் இருக்கிறோம். சங்கீதம் 91:1 இந்த இடத்தைப் பற்றி பேசுகிறது. மேலும் அங்கு வசிப்பவர்கள் எல்லா எதிரிகளையும் தோற்கடிப்பார்கள் என்று நமக்குச் சொல்கிறது: “உன்னதமானவரின் மறைவில் இருப்பவன், சர்வவல்லவரின் நிழலில் தங்குவான்.”

ரகசிய இடம் கடவுளின் பிரசன்னம் என்று நான் நம்புகிறேன். நாம் அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போது, அவருடன் ஐக்கியம் கொள்ளும் போது, நாம் அவருடைய சமாதானத்தை அனுபவிக்கிறோம். சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நிலையாக இருக்கும் ஒரு விசுவாசியை என்ன செய்வது என்று சாத்தானுக்குத் தெரியாது. சில சமயங்களில் இதைச் செய்வது கடினம், ஆனால் நாம் அவருடைய ஆவியின் மூலம் கடவுளுடன் ஒற்றுமை மற்றும் ஐக்கியம் கொண்டிருப்பதால், ஸ்திரத்தன்மைக்கான பலத்தைப் பெறுகிறோம்.

கடவுளுடன் ஐக்கியம் கொள்ள சிறிது காலம் எடுக்கும். ஆனால் அது நன்றாக செலவிடப்படுகிறது. இது உங்களை வலுவாக வைத்திருக்கும் எனவே எதிர்பாராத சவால்களால் நீங்கள் அழிந்து விடமாட்டீர்கள். நீதிமொழிகள் 18:14 கூறுகிறது, “மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” வலிமை பெறுவதற்கு உங்களுக்கு சிரமம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்; வலுவாக இருங்கள்!


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் வாழ்க்கையில் எதை எதிர்கொண்டாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின் மூலம் உங்களுக்கு வெற்றி இருக்கிறது!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon