
“போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.” – 1 பேதுரு 3:2
நீங்கள் ஒருவருக்கொருவர் ரசிக்கத் தொடங்கும் போது, உங்கள் திருமணத்தில் அளவில்லா சந்தோசத்தைக் கொண்டிருக்க முடியும். தேவன் உங்களை, நீங்கள் பரிதாபமாக இருக்க ஒன்றிணைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சண்டையிடுவதற்கோ, ஒருவருக்கொருவர் குறை சொல்லவோ அல்லது ஒருவரையொருவர் மாற்ற முயற்சிக்கவோ அவர் உங்களை ஒன்றிணைக்கவில்லை.
ஒரு பெண் தன் கணவனை ரசிக்க வேண்டும் என்று வேதம் குறிப்பாக கூறுகிறது, ஆனால் இந்த வேத வசனமானது, திருமணத்தில் இரண்டு பேரையும் குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். இருப்பினும், ஒரு பெண் அல்லது ஆண் “நான் என் கணவரை” அல்லது “நான் என் மனைவியை”ரசிக்கிறேன் என்று சொல்வதை நான் அரிதாகவே கேட்கிறேன்.
ஆனால் திருமணத்தில், நாம் ஒருவருக்கொருவர் ரசிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து சிரித்துக் கொண்டும், சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது எப்போதும் எளிதானது அல்ல என்பதை நான் உணர்கிறேன். திருமணத்தில் நிச்சயமாக அதன் சவால்கள் உள்ளன; ஆனால் வேறுபாடுகள் இருக்கும் போதும், உங்கள் மனைவியைப் பற்றிய அற்புதமான விஷயங்களை உங்களுக்குக் காட்டும்படி கடவுளிடம் கேளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை அவர் எப்படிப் பார்க்கிறாரோ அப்படி நீங்களும் பார்க்க உங்களுக்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள். ஏனென்றால் அவர் உங்களை நேசிப்பதைப் போலவே அவர்களையும் நேசிக்கிறார், அவர்களுக்காகவும் மரித்தார்.
நீங்கள் ஒருவருக்கொருவர் கடவுளின் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்போது, மகிழ்ச்சி இயற்கையாகவே உங்கள் இருதயத்தை நிரப்பும். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை அனுபவிக்க முடியும்.
ஜெபம்
தேவனே, நான் என் வாழ்க்கைத் துணையை அனுபவிக்க விரும்புகிறேன். திருமணம் கடினமாக இருக்கும்போது கூட, நீர் அவர்களைப் பார்ப்பது போல் பார்த்து, மகிழ்ச்சியாயிருக்க எனக்கு உதவும்.