
“நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” – 2 தீமோ 4:5
மக்கள் விடுதலையோடு இருக்க பிறந்திருக்கின்றனர்; இது கடவுளிடமிருந்து கிடைத்த ஈவு. கேள்வி என்னவென்றால், சுதந்திரமாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய மனமுவந்தவர்களாய் இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால், தேவன் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை நீங்கள் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். நாளடைவில் உங்கள் குழப்பத்திலிருந்து நீங்கள் வெளியே வந்து விடுவீர்கள்.
2 தீமோத்தேயு 4:5-ல் பவுல் தீமோத்தேயுவிடம் அமைதியாகவும், சம நிலையாகவும் இருந்து ஊழியத்தின் கடமைகளைச் செய்யும்படி கூறினார். அது நம் அனைவருக்கும் நல்ல அறிவுரை.
நாம் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, நம் உணர்ச்சிகளால் ஆளப்படுவதற்குப் பதிலாக, நாம் அமைதியாக இருந்து, கடவுள் நம்மைச் செய்ய சொல்லி அழைத்ததில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் எதைப் பற்றியாவது வருத்தப்படுகிறீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையை அழிக்க விடாமல், அதை நண்மையாக மாற்றவும். உங்களை காயப்படுத்தி துஷ்பிரயோகம் செய்பவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் தீமையையும் கோபத்தையும் வெல்லுங்கள். நல்லது செய்வதன் மூலம் சுயநலத்தை முறியடியுங்கள்.
எதிரி உங்கள் உணர்ச்சிகளைத் தூண்ட முயற்சிக்கும்போதெல்லாம், அமைதியாக இருங்கள், கடவுள் உங்களை செய்ய அழைத்ததைச் செய்யுங்கள்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, அமைதியாகவும், நிலையாகவும் இருக்க எனக்கு உதவும். நான் எனது வாழ்க்கையை ரசிக்கவும், நீர் என்னை அழைக்கிற வேலையைச் செய்யவும், சுதந்திரமாக இருக்கவும் முடியும் என்று நம்புகிறேன்.