
தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். (சங்கீதம் 54:2)
நாம் அனைவரும் நம்முடைய ஜெபங்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், மேலும் கடவுளின் இருதயத்தையும், அவருடைய திட்டங்களையும் நம் வாழ்விலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் வெற்றிகரமாகக் கொண்டுவரும் வகையில் கடவுளிடம் பேசுவதை நாம் விரும்புகிறோம். வேதம் கூறுகிறது, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16). பலன் தரும் பயனுள்ள ஜெபங்களை நாம் ஜெபிக்க வேண்டுமென்றால், எது பயனளிக்காது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைகள் அனைத்தும் வெற்றியடைவதில்லை. உதாரணமாக, சில சமயங்களில் நாம் எதையாவது மிகவும் தீவிரமாக விரும்புகிறோம், அதனால் நாம் கடவுளுடைய சித்தத்தின்படி ஜெபிக்கத் தவறி விடுகிறோம்-அந்த ஜெபங்கள் பலனளிக்காது. சில சமயங்களில் நாம் மிகவும் கோபமடைகிறோம் அல்லது புண்படுகிறோம். கடவுளுடைய வார்த்தை அல்லது அவருடைய இருதயத்தின் அடிப்படையில் அல்லாமல் நம்முடைய உணர்ச்சிகளின் அடிப்படையில் ஜெபிக்கிறோம்—அந்த ஜெபங்களும் பலனளிக்காது.
பயனுள்ள ஜெபங்களை ஜெபிக்க என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் தம் வார்த்தையின் மூலம் சொல்கிறார். சூத்திரங்கள் அல்லது சில கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பயனுள்ள பிரார்த்தனைகள் விளைவதில்லை. பயனுள்ள ஜெபம் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது; இது எளிமையானது, நேர்மையானது மற்றும் நம்பிக்கையால் நிறைந்தது; விதிகள் அல்லது வழிகாட்டுதல்கள் மூலம் இது வருவதில்லை, ஆனால் அது சரியான அணுகுமுறையுடன் இருதயத்தில் இருந்து வர வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஒரு கெட்ட மனப்பான்மையை மாற்றுவதற்கு ஒரு தீர்மானம் எடுப்பதன் மூலம் அதை மாற்றலாம்.