“உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,” – எபே 4:23
புதிய தொடக்கத்தை அனுபவித்தவர்களின் கதைகளால் வேதாகமம் நிரும்பியிருக்கிறது. நாற்பது ஆண்டுகள் மேய்ப்பனாக இருந்த மோசே ஒரு தலைவராக மாறினான். தேவன் பவுலைப் புதுப்பித்து அவனை ஒரு பெரிய அப்போஸ்தலனாக மாற்றும் வரை கிறிஸ்துவை வெறுத்தான்.
நாம் இயேசுவை நம் இரட்சராக ஏற்றுக் கொள்ளும் போது அதுவே புதிய தொடக்கங்களுக்கெல்லாம் மேண்மையானது. புதிய ஜீவிய மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் தருணத்தைப் பெற்ற புதிய சிருஷ்டிகளாகிறோம். ஆனால் அந்த புதிய வாழ்க்கையை அனுபவிக்க செய்ய வேண்டிய முதல் காரியம், அது உங்களுக்கு இருக்கிறது என்று நம்புவதாகும்.
எபே 4:23, நாம் நம் மனதிலும், மனப்பான்மையிலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டுமென்று சொல்கிறது. வேதத்திலே பெரிய மக்களைப் பற்றி வாசித்து விட்டு அவர்களைப் போன்று நீங்கள் இல்லை என்று நினைப்பது சுலபமானதே. ஆனால் அப்படியாக நீங்கள் நினைக்கத் தொடங்கும் போது, உங்கள் மனதை உடனேயே புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உணர்வதைப் போன்று அல்ல, தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப சிந்திக்க தொடங்குங்கள். அவரது அன்பைப் பெற்றுக் கொண்டு ஒரு புதிய தொடக்கத்தை அனுபவியுங்கள். தேவன் என்னை முற்றிலுமாக உள்ளிருந்து வெளியாக மார்றுகின்றார், எனக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறார், இன்னும் பெரிய காரியங்கள் காத்திருக்கிறது என்ற மனப்பான்மையோடு நீங்கள் வாழும் போது, வாழ்க்கை மிகவும் இனிமையாக மாறுகின்றது.
ஜெபம்
தேவனே, உம்முடைய வார்த்தையால் என் மனதை புதுப்பிக்க விரும்புகிறேன். மோசேக்கும் பவுலுக்கும் நீர் கொடுத்ததைப் போன்று எனக்கும் ஒரு புதிய தொடக்கத்தையும், அழைப்பையும் நீர் வைத்திருக்கிறீர் என்று அறிந்திருக்கிறேன். அதை உம்மால் நிறைவேற்ற முடியும் என்று நம்பி இன்றே அதைப் பெற்றுக் கொள்கிறேன்.