
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (சங்கீதம் 133:1, 3)
நீங்கள் ஏதோவொன்றைப் பற்றி ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, கடவுளிடமிருந்து கேட்கவில்லை எனத் தோன்றினால், உங்களுடன் ஒருமனதுடன் ஜெபிக்க நீங்கள் யாரையாவது அழைக்க வேண்டியிருக்கலாம். அந்த வகையான ஒற்றுமை ஒரு வல்லமை வாய்ந்த ஆவிக்குறிய இயக்கம். இன்றைய வசனங்களின்படி, அது நல்லது மற்றும் அது கடவுளின் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உடன்படும் போது, இயேசு அவர்களுடன் இருப்பதாக உறுதியளிக்கிறார். மேலும் அவருடைய பிரசன்னம் நம் வாழ்விலும், நம் சூழ்நிலைகளிலும் நாம் கற்பனை செய்வதை விட அதிக வல்லமையை செலுத்துகிறது. மத்தேயு 18:19-20 இல் அவர் இவ்வாறு கூறுகிறார்: “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். தேவன் தனிமனிதரான நம்முடன் இருக்கிறார், ஆனால் நாம் ஒற்றுமை மற்றும் உடன்படிக்கையில் ஒன்றாக வரும் போது நமது வல்லமை அதிகரிக்கிறது. ஒருவன் ஆயிரம் பேரை துரத்துவான், இருவர் பதினாயிரம் பேரை ஓட்டுவார்கள் என்று வேதம் கூறுகிறது (உபாகமம் 32:30ஐப் பார்க்கவும்). எனக்கு அந்த மாதிரி கணக்கு பிடிக்கும்!
கடவுளின் ஆசீர்வாதம், ஒற்றுமையின் மீது இருப்பதாலும், அவருடைய பிரசன்னம் அவருடைய பெயரில் உடன்படுபவர்களிடமிருப்பதாலும், எதிரி மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், உறவுகளில் சண்டைகளை ஏற்படுத்துவதற்கும், ஒருவருக்கொருவர் முரண்படுவதற்கும் விடாமுயற்சியுடன் செயல்படுகிறான். ஒற்றுமை மற்றும் உடன்பாட்டின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கடவுளிடம் பேசுவதன் மூலமும் மற்றவர்கள் மூலம் அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலமும் அந்த வல்லமையைப் பயன்படுத்த வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மற்றவர்களுடன் ஜெபிப்பதை விட்டு விடாதீர்கள்.