“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” – எபி 12:11
நம் கவனத்திற்கும், பெலத்திற்கும், நேரத்திற்கும் அனேக காரியங்கள் போட்டி போடுகிறது. என்னுடைய கால அட்டவனை மேற்கொள்ளும் படி இருக்கிறது என தேவனிடம் நான் குறை கூறுவதுண்டு. தேவனே ‘நான் செய்கிறதை யாரால் செய்ய இயலும்’ என்று கதறுவதுண்டு.
பின்னர் எனக்கு தோன்றியது ‘நான் தான் என் கால அட்டவணையை உண்டாக்கினேன்’. என்னை தவிர வேறு எவராலும் அதை மாற்ற இயலாது. நான் இனிமேலும் காரியங்கள் எல்லாம் வேறு விதமாக இருந்தால் நன்றாக் இருக்கும் என்று ஆசைப்படுவதில்லை. ஏனென்றால் ஆசைப்படுவதால் எதுவும் மாறுகிறதில்லை.
என் வாழ்கையை எளிமைப்படுத்த நான் என்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டுமென தேவன் எனக்கு காட்டினார். உங்கள் வாழ்க்கையையும் மாற்ற வேண்டுமானால் நீங்களும் அவ்வாறு தான் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரிடம் உதவி கேளுங்கள். எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எதை மறுக்க வேண்டுமென அவரே உங்களுக்கு காட்டுவார்.
ஆரம்பத்தில் அது கடினமாக இருக்கலாம், விஷேசமாக கடந்த காலத்திலே நீங்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டை கொண்டிருந்தால். ஆனால் ஒழுக்கக்கட்டுப்பாட்டிற்கும், சுய கட்டுப்பாட்டிற்கும் கிடைக்கும் பலன் ஏற்றதாகவே இருக்கும். ஒழுக்கக்கட்டுப்பாடானது சமாதானமான பலனைக் கொடுக்கும் என்று வேதம் சொல்கிறது. இன்றே உங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்குங்கள். தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் சமாதானமான வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குங்கள்.
ஜெபம்
தேவனே, ஒரு ஒழுக்கக்கட்டுப்பாட்டினால் கிடைக்கும் சமாதான பலனை அனுபவிக்க விரும்புகிறேன். நான் என்னை அதிகமான அலுவல்களுக்குள் அர்பணிக்கும் போது, நான் செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் செய்ய நீர் எனக்கு உதவுவீராக