“பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.” – 1 சாமு 17:37
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு சவாலான சூழ்நிலையிலே நாம் நம்மை இருக்க காணும்போது, நம்மில் அநேகர் எதிர்மறை சிந்தனையாளர்களாக காணப்படுகின்றனர். ஆனால் சோதனையான நேரங்களை கடந்துசெல்ல உங்கள் எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையாக மாற்றுங்கள்.
தேவன் உங்களை அவருடைய வார்த்தையை படிப்பதன் மூலம் ‘சத்திய பயணத்திலே’ கொண்டு செல்ல விரும்புகிறார். அது அற்புதமான பலன்களை அளிக்கிறது. அது உங்களுடைய எதிர்மறையான எண்ணங்களை சுத்திகரித்து உங்களுடைய சூழ்நிலையில் இருக்கும் நேர்மறையைக் காண செய்கிறது.
நேர்மறையாக இருப்பது வல்லமையானது. நேர்மறையாக இருப்பதற்கு உங்களுடைய கடந்தகால வெற்றிகளை நினைத்துப் பார்ப்பது பெரிய பங்கு வகிக்கிறது.
தாவீது இராட்சத கோலியாத்தை எதிர்கொண்டபோது, அவன் ஏற்கனவே தோற்கடித்த சிங்கம், கரடியை நினைத்துப் பார்த்தான். அது அவனது சூழ்நிலைக்காண தைரியத்தை கொடுத்தது.
இப்போது நீங்கள் கடினமான சூழ்நிலையின் ஊடாக செல்வீர்கள் என்றால் அனேகமாக நீங்கள் எதிர்கொண்ட முதல் சவால் அது அல்ல என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். முந்தி ஏற்பட்டதை கடந்து வந்து விட்டீர்கள். அதன் மூலமாக சில விலையேறப்பெற்ற பாடங்களை கற்றுக் கொண்டிருக்கலாம். இதையும் கூட கடந்து விடுவீர்கள்.
தாவீதைப் போல உங்களுடைய கடந்த கால வெற்றிகளை எண்ணிப் பாருங்கள். பின்னர் வார்த்தைக்கு சென்று தேவன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். நல்ல நாட்கள் வந்து கொண்டே இருக்கிறது. தேவன் அதை வாக்களித்திருக்கிறார்!
ஜெபம்
சில சமயங்களில் எனக்கு முன்னால் இருக்கும் சூழ்நிலை முடியவே முடியாது என்பது போல் தோன்றுகிறது. ஆனால் நீர் என் கடந்த காலத்தை கடக்கும்படி செய்தீர். அவ்வாறு மீண்டும் நீர் செய்வீர் என்று அறிந்திருக்கிறேன். கடந்தகால வெற்றிகளை நினைக்கவும், என்னுடைய தற்கால சூழ்நிலையைப் பற்றி நேர்மறையாக நினைக்கவும் எனக்கு உதவியருளும்.