எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:18)
பலர் கடவுளுடைய சத்தத்தைக் கேட்க விரும்புவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்களுடைய வாழ்க்கைக்கான அவருடைய சித்தம் என்ன என்பதை அவர் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதே. சில சமயங்களில் மக்கள் கடவுளின் விருப்பத்தை, உலகின் மிகவும் சிக்கலான மர்மமாக கருதி, “சரி, கடவுளுடைய சித்தத்தை நான் அறிந்திருந்தால், அதற்கு நான் கீழ்ப்படிவேன்,” அல்லது “நான் உண்மையில் கடவுளைப் பின்பற்ற விரும்புகிறேன்; அவருடைய விருப்பம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்கின்றனர்.
நீங்கள் மினியாபோலிஸுக்குச் செல்வது, வேலைகளை மாற்றுவது அல்லது தேவாலயத்தில் ஈஸ்டர் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் வகிப்பது ஆகியவை கடவுளின் விருப்பமா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கைக்கான கடவுளின் விருப்பத்தை அறிந்து கீழ்ப்படிவதற்கு நான் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியை வழங்க முடியும். நன்றியுடன் இருங்கள். நன்றியுடன் இருங்கள்-எல்லா நேரத்திலும், நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சினகளினூடே கடந்து சென்று கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்றியுள்ள இருதயத்தை வைத்திருங்கள், அது எல்லா காரியங்களிலும் தெளிவான வழிகாட்டுதலுக்கான வழியைத் திறக்கும். சில நேரங்களில் நன்றி செலுத்துவது எளிதாகவும், சில சமயங்களில் கடினமாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் நன்றி செலுத்தும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், நீங்கள் கடவுளின் சித்தத்தில் இருப்பீர்கள். மேலே உள்ள வசனம் எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை என்பதைக் கவனியுங்கள்; எல்லாவற்றிலும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அது சொல்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நாள் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து, வெளிச்சம் அணைந்திருப்பதையும், உங்கள் உணவு குளிர்ச்சியாக இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். குளிர்சாதனப் பெட்டி உடைந்து விட்டது என்று கடவுளுக்கு நன்றி சொல்லத் தொடங்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்களிடம் குளிர்சாதனப் பெட்டி இருப்பதற்காகவும், அதில் உணவு வைப்பதற்கும் நன்றி சொல்லத் தொடங்கலாம். அதை சரிசெய்ய முடியும் என்பதற்கு நன்றியுடன் இருப்பது மற்றும் அதை சரிசெய்ய நீங்கள் காத்திருக்கும் போது நன்றியுள்ள இருதயத்தை வைத்திருப்பது. இன்றும் ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துவதைப் பயிற்சி செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: எல்லாவற்றிலும் நன்றி செலுத்துங்கள்.