கடவுளுக்காக நீங்கள் பசியாக இருக்கிறீர்களா?

கடவுளுக்காக நீங்கள் பசியாக இருக்கிறீர்களா?

அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. (சங்கீதம் 107:9)

நாம் பசியாக இருக்கும்போது உணவைப் பெறுவதற்குப் பெரும் முயற்சி செய்கிறோம். நாம் உணவைப் பற்றி சிந்திக்கிறோம், அதைப் பற்றி பேசுகிறோம், அதை வாங்க கடைக்குச் செல்கிறோம், கவனமாக தயார் செய்கிறோம். நம் வாழ்வில் அதிகமாக, கடவுளுக்காக நாம் பசியாக இருந்தால், அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாம் முழு இருதயத்தோடும், விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும், முழுத் தீவிரத்தோடும் அவரைத் தேட வேண்டும் என்று கடவுள் சொன்னார்.

ஒவ்வொரு வாரமும் இயற்கை உணவுக்காக நிறைய நேரம் செலவிடுகிறோம், ஆனால் ஆவிக்குறிய உணவுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம்? நம்மில் பெரும்பாலோர் வாரத்தில் குறைந்த பட்சம் பதினான்கு மணிநேரம் உணவைத் தேடுவதற்கும், தயாரிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் செலவிடுகிறோம் என்று மதிப்பிடுகிறேன். கடவுளைத் தேடுவதற்கும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை நாம் நேர்மையாக நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் கடவுளுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பது, அவருடனான நமது உறவை வளர்ப்பதற்கு, எவ்வளவு நேரம் அவரோடு செலவிட தயாராக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நேரம் நம் அனைவருக்கும் மதிப்புமிக்கது. அதை, நமக்கு மிக முக்கியமான விஷயங்களில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கலாம் அல்லது உங்கள் நேரத்தை முதலீடு செய்யலாம்; அது உங்கள் விருப்பம். நாம் எதை வீணாக்குகிறோமோ அதை இழக்கிறோம். ஆனால் நாம் எதை முதலீடு செய்கிறோமோ அதை ஈவுத்தொகையுடன் திரும்பப் பெறுகிறோம்.

நீங்கள் குறைந்தபட்சம், இயற்கை உணவைத் தேடுவதைப் போல, கடவுளைத் தேடும் நேரத்தை செலவிட வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். விரைவில் நீங்கள் அவருடைய ஞானத்தாலும், பிரசன்னத்தாலும் நிரப்பப்படுவீர்கள். அவர் உங்கள் ஆத்துமாவை தன்னால் நிரப்புவதால் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு திருப்தியை காண்பீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: பசியுள்ள ஆத்துமாவை கடவுள் மட்டுமே நிரப்புகிறார். எனவே உங்கள் அட்டவணையில் அவருக்கு முன்னுரிமை கொடுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon