அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். (மத்தேயு 14:23)
அமைதியான இடத்தில் கடவுளுடன் தனியாக நேரத்தை செலவிடுவது எனக்கு இன்றியமையாதது. அது உங்களுக்கும் இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன். எனது வீட்டில் ஒரு அலுவலகம் உள்ளது. அங்கு நான் தினமும் காலையில் எனது நாளைத் தொடங்கும் முன் கடவுளைச் சந்திக்கச் செல்கிறேன். அதுமட்டுமல்லாமல், வருடத்திற்கு நான்கு முறை நான் சில நாட்கள் விலகி தனியாக இருக்க விரும்புகிறேன். நான் நீண்ட நேரம் அமைதியாகவும், கடவுளின் மீது கவனம் செலுத்துவதையும் அனுபவிக்கிறேன்.
பெரும்பாலான மக்கள் ஆண்டுதோறும் விடுமுறை எடுத்து ஒவ்வொரு வாரமும் சில வகையான பொழுதுபோக்குகளை திட்டமிடுகிறார்கள். நாம் இளைப்பாற விரும்புகிறோம், அதில் தவறில்லை. சீரான, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகளை பராமரிக்க நமக்கு இது தேவை. ஆனால் உண்மையில் நமக்கு ஆவிக்குறிய விடுமுறைகள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. மேலும் அவைதான் நம்முடைய வருடாந்திர நாட்காட்டி அல்லது வாராந்திர அட்டவணையில் வைக்கும் முதல் விஷயமாக இருக்க வேண்டும்.
வேறு எதையும் முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் அவருடன் உங்கள் நேரத்தை ஒதுக்கினால், அது கடவுளுக்கு எவ்வாறு மதிப்பளிக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். நான் அமெரிக்காவிலும், வெளிநாட்டிலும் மாநாடுகளை நடத்துகிறேன். மேலும் இந்த மாநாடுகளில் ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பயணம் செய்து, அதற்காய் விடுமுறை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன். நான் எப்பொழுதும் அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்களுடைய தேர்வுகளில் கடவுள் பெருமைப்படுகிறார் என்பதை நான் அறிவேன். கடவுளுடன் நேரத்தை செலவிடுவதற்காக எதையாவது தியாகம் செய்வதால் அவர்கள் ஆவிக்குறிய ரீதியில் வளருகிறார்கள்.
உங்கள் சூழ்நிலைக்கான பதில்களைக் கண்டுபிடிக்க, நீங்கள் கடவுளுடன் நேரத்தை செலவிட வேண்டும். சில சிரமங்கள் அல்லது சோகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். முதலில் கடவுளைத் தேடுங்கள், பின்னர் நீங்கள் ஆவிக்குறிய ரீதியில் வலுவாக இருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவராக இருப்பீர்கள். பிதாவாகிய கடவுளுடன் இயேசு தனியாக இருக்க வேண்டும் என்றால், அது நமக்கும் நிச்சயமாகத் தேவை.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை
உங்கள் காலெண்டரை இப்போதே எடுத்து, கடவுளுடன் சில சிறப்பு நேரத்தை திட்டமிடுங்கள்.