இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான். (1 நாளாகமம் 29:5)
கிறிஸ்தவர்கள் முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழத் தொடங்கும் போது, எதிரிகளுக்கு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். இது எப்படிப்பட்ட பக்தி என்றால் நமக்கு இருக்கும் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம்; எதையும் தடுத்து நிறுத்த முடியாது. நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது, நம் வாழ்வில் அவர் பேசத் தேர்ந்தெடுக்கும் எந்தப் பகுதியைப் பற்றியும் நம்மிடம் பேசவும், அவற்றை சரி செய்யவும் கடவுளை அழைக்கிறோம்.
கடவுளின் வேலையை செய்ய நாம் பிரித்தெடுக்கப்படிருப்போமேயானால், நம் வாழ்வின், ஏதேனும் சில பகுதிகளில் நாம் கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம் இருதயத்தில் சிறிய, மறைக்கப்பட்ட ரகசிய இடங்கள் உள்ளனவா? “சரி, கடவுளே, அதைத் தவிர எல்லாவற்றையும் உமக்கு தருகிறேன்” அல்லது “ஓ, இல்லை, கடவுளே! அதற்கு நான் தயாராக இல்லை!” அல்லது “கடவுளே, அந்த உறவை தொட வேண்டாம்” அல்லது “ஆண்டவரே, அதைச் செய்வதை விட்டு விடச் சொல்லாதேயுங்கள்”? முழு சுத்திகரிப்பு என்பது, “ஆண்டவரே, நான் தினமும் என் வேதத்தை வாசிப்பேன்; நான் வசனங்களை மனப்பாடம் செய்து, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து, ஒரு நாளைக்கு பல மணிநேரம் ஜெபிப்பேன், ஆனால் எனக்குப் பிடித்த ஒரு சிறந்ததை விட்டு விடுமாறு என்னிடம் கேட்காதீர், என்று சொல்வதா! இல்லை, முழு சுத்திகரிப்பு என்பது உங்கள் முழு இருதயத்தோடும் கூறுவதும், அர்த்தப்படுத்துவதும் ஆகும்: “நான் என்னை முழுவதுமாக உமக்குக் கொடுக்கிறேன், ஆண்டவரே. என்னிடம் பேசி உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லும்”
நாம் அனுபவிக்கும் அனைத்தையும் கடவுள் நம்மிடமிருந்து எடுத்து விடுவார் என்று எதிர்பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் அதைச் செய்ய மாட்டார். ஆனால், எல்லாம் அவருக்காக இருக்க வேண்டும். நமக்கு எது உண்மையில் நல்லது, எது இல்லாதது என்பதை அவர் தேர்வு செய்ய வேண்டும்; அவரை முழுமையாக நம்புவதே நமது வேலை.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளிடமிருந்து எதையும் மறைக்காமல் முழுமையாக நம்மை அவருக்கு கொடுக்க வேண்டும்.