எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. (ரோமர் 13:1)
அதிகாரத்திற்கு மரியாதை தரும் மற்றும் கீழ்ப்படியும் மனப்பான்மை, நம் அன்றாட வாழ்வில் ஊடுருவ வேண்டும்-ஏனெனில், நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நம் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் கடவுள் அதிகாரத்தை வைத்திருக்கிறார். அவர், நமக்கு ஆவிக்குறிய அதிகாரம் மற்றும் இயற்கையான அதிகாரம் ஆகிய இரண்டையும் வைத்திருக்கிறார். மேலும் இரண்டிற்கும் கீழ்ப்படிவது முக்கியம். அதிகாரத்தில் உள்ளவர்கள் வைக்கும் அடையாளங்கள் கூட மதிக்கப்பட வேண்டும். “வாகனங்கள் நிறுத்தக்கூடாது” என்ற பகுதி இருந்தால், அங்கு நிறுத்த வேண்டாம். மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்துமிடமாக இருந்தால், நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தாலும், அங்கு சென்று வாகனத்தை நிறுத்தவும்! “நடக்காதே” என்று சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால், நடக்க வேண்டாம். நீங்கள் அவசரமாக இருந்தாலும் தெருவைக் கடக்க வேண்டாம். நீங்கள் நெடுஞ்சாலையில் “கடந்து செல்ல வேண்டாம்” என்ற பகுதியில் இருந்தால், கடந்து செல்ல வேண்டாம்.
நீங்கள் நினைக்கலாம், சரி, இந்த விஷயங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதெல்லாம் சின்ன விஷயங்கள். எனக்கு பெரிய பிரச்சனைகள் உள்ளன, அதற்கான பதில்கள் தேவை என்று. அதிகாரத்திற்கு மதிப்பளிக்க அல்லது நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சிறிய காரியங்கள் மற்றும் அன்றாடத் தேர்வுகளில் கவனம் செலுத்தாத வரை, நாம் அனைவரும் பெரிய பிரச்சனைகளை வைத்திருப்போம்.
நான் இப்போது விவரித்ததைப் போன்ற நடத்தைகள் அதிகாரத்தின் மீதான அவமரியாதை மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. மேலும் அது கடவுளின் சத்தத்தைக் கேட்கும் திறனைத் தடுக்கிறது. ஏனெனில் கடவுள் தாமே, நம் வாழ்வில் அதிகாரத்தை வைத்து அதை நாம் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நம்மைச் சுற்றியுள்ள அதிகாரத்தை நாம் மதிக்கும்போது நாம் அவரை மதிக்கிறோம்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: சிறிய விஷயங்களில் கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் மிகவும் கவனமாக இருங்கள். அவை உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.