முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். (ரோமர் 6:17)
நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது, கடவுள் நமக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கிறார்—சரியானதைச் செய்ய விரும்பும் இருதயத்தை. எவ்வாறாயினும், நமது நடத்தை, நமது புதிய இருதயத்தைப் பின்பற்ற சிறிது காலம் எடுக்கும். அது பெரும்பாலும் மிகவும் வெறுப்பாக இருக்கலாம். நமக்குள், ஒரு பகுதி சரியாகச் செய்ய விரும்புகிறது, இன்னொரு பகுதி அதை எதிர்த்துப் போராடுகிறது. கலாத்தியர் 5:17 இல் பவுல் விவாதிக்கும் மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையிலான போராட்டம் அதுதான்.
புதிய பிறப்பில், பரிசுத்தமான, கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் கடவுள் நமக்குள் வைக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள், புதிய சிருஷ்டிகளாக ஆக்கப்பட்டோம்; பழையவைகள் ஒழிந்துபோய் எல்லாமே புதியதாயின (பார்க்க 2 கொரிந்தியர் 5:17). நாம் புதிய ஆவிக்குரிய களிமண்ணாக ஆக்கப்பட்டோம் என்று நான் சொல்ல விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவின் சாயலாக வடிவமைக்க அனுமதிப்பதற்காக, நம் வாழ்க்கையை செலவிடுகிறோம் (ரோமர் 8:29 ஐப் பார்க்கவும்). நாம் கீழ்ப்படிதலுடன் இருக்க விரும்பும் ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்ததற்காக, கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
உங்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள், மனம் தளராதீர்கள், ஏனென்றால் கடவுள் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். நமக்கு பின்னால் இருப்பதை விட்டு விட்டு, முழு கீழ்ப்படிதலுக்கான இடத்தை நோக்கி தொடர்ந்து சென்றால், கடவுள் மகிழ்ச்சியடைகிறார். நாம் கடவுளுடன் நடக்கக் கற்றுக்கொள்கிறோம். நடப்பது தான் மெதுவான பயண முறையாகும். நீங்கள் இருக்க விரும்பும் இடத்தில், நீங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று இயேசுவின் மீது கவனம் செலுத்துங்கள், உங்கள் தோல்விகளில் அல்ல.