என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். (சங்கீதம் 30:11)
பிப்ரவரி 1976-ல் ஒரு வெள்ளிக்கிழமை காலை வேளையில், நான் விரக்தியும் அவநம்பிக்கையுமாக இருந்தேன். தேவாலயம், நான் செய்ய வேண்டும் என்று சொன்ன அனைத்தையும் செய்ய முயற்சித்தேன், கடவுளுக்கு நான் தேவை என்று நான் நினைத்தேன், ஆனால் எதுவும் செயல்படவில்லை, நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன். என் வாழ்க்கையில் எனக்கு மாற்றம் தேவை என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு என்னவிதமான மாற்றம் தேவை என்று சரியாகத் தெரியவில்லை. நான் தேடுகிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் எதைத் தேடுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
அன்று காலை, நான் கடவுளிடம் கூக்குரலிட்டேன், மேலும் என்னால் தொடர்ந்து செல்ல முடியாது என்று அவரிடம் சொன்னேன். எனக்கு நினைவிருக்கிறது, “கடவுளே, ஏதோ குறைகிறது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஏதோ குறைகிறது” என்று சொன்னேன்.
எனக்கு ஆச்சரியமூட்டும் விதத்தில்மாக, அவர் சத்தமாக என்னிடம் பேசினார், என் பெயரைக் கூப்பிட்டு, பொறுமையைப் பற்றி என்னிடம் பேசினார். அந்த நிமிடத்திலிருந்து, அவர் என்னுடைய நிலைமைக்கு ஏதாவது செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியும். அந்த நாளின் பிற்பகுதியில், என் காரில், நான் இதுவரை அனுபவித்திராத வகையில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் இயேசு என்னை நிரப்பினார். அந்த உணர்வை இப்படி விவரிக்கலாம், யாரோ என்னிடம், திரவமான அன்பை ஊற்றியதாக நான் உணர்ந்தேன். புதிய சமாதானம், மகிழ்ச்சி மற்றும் அன்பு என்னுள் தங்கியிருப்பதையும், என்னிலிருந்து வெளியேறுவதையும் நான் உடனடியாக கவனித்தேன், என்னைச் சுற்றியிருந்த அனைவருமே, நான் முன்பு இல்லாத அளவுக்கு மற்றவர்களை நேசிக்கத் தொடங்கியபோது, எனது நடத்தையில் நேர்மறையான மாற்றங்களைக் கண்டார்கள்.
அடுத்த நாள் காலையில் எழுந்தேன், எல்லாமே ஒரு ஊக்கமளிக்கும் முடிவுக்கு வந்ததைப் போல உணர்ந்தேன். நான் புதிய தொடக்கங்களின் இடத்தில் இருப்பதை அறிந்து அன்று இரவு உறங்கச் சென்றேன். கடவுள் அடிக்கடி இவ்வாறு செயல்படுகிறார்; அவர் நம் வாழ்வில் திடீரென்று பேசுகிறார் மற்றும் செயல் படுகிறார். கடவுளுக்காகக் காத்திருப்பதில் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் இன்று உங்கள் “திடீர்” நாளாக இருக்கலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று உங்கள் “திடீர்” நாளாக இருக்கலாம்.