“உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.” – சங்கீதம் 119:15
ஆழமான மனக் காயங்கள் பெரிய ஏமாற்றங்களிலிருந்து வருவதில்லை. நாம் விரும்பிய வேலை அல்லது பதவி உயர்வு பெறத் தவறும்போது வரலாம். தொடர்ச்சியான சிறிய எரிச்சல்கள் மற்றும் ஏமாற்றங்களிலிருந்து ஆழமான உணர்ச்சிகரமான காயங்கள் வரலாம். அதனால் தான் சிறிய, தினசரி ஏமாற்றங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவற்றை எப்படி சரியான கண்ணோட்ட்த்தில் வைத்திருப்பது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து ஏதோவொன்றில் கவனம் செலுத்தும்போது, அது தியானம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வரும் சிறிய விரக்திகள் எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது. ஆனால் அவை அதிகமாகும் பொழுது, வேறு எதையும் தியானிப்பது சாத்தியமில்லை.
ஆனால் உங்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கும், சோர்வடைவதற்கும் பதிலாக, கடவுள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களுக்காக அவர் அளித்த வாக்குறுதிகளை தியானியுங்கள். வாழ்க்கை உங்களை கீழாக தள்ளி விடக்கூடும், ஆனால் நீங்கள் கீழேயே இருக்க வேண்டியதில்லை. தேவன் உங்களை தூக்கி எடுக்க தயாராக இருக்கிறார். ஆயத்தமாயும் இருக்கிறார்.
ஏமாற்றங்கள் உங்களை கீழே அழுத்தும் போது, அவைகள் உங்களை அமிழ்ந்து போகச் செய்ய அனுமதிக்கலாம் அல்லது அவற்றை நீங்கள் மேலே செல்வதற்கான படிக்கல்லாக இருக்க அனுமதிக்கலாம். கடவுளின் வழிகளைத் தியானிப்பதன் மூலம் அவற்றை எதிர்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்காக சிறந்த காரியங்களைக் கொண்டுள்ளார். மேலும் ஏமாற்றத்தைத் தோற்கடிக்க அவர் உங்களுக்கு உதவுவார்.
ஜெபம்
தேவன், சங்கீதம் 119:15ல் சொல்வது போல், நான் உம்முடைய வார்த்தையை தியானிப்பேன், என்னை கீழே அழுத்தும் சிறிய ஏமாற்றங்களை அல்ல. உம்முடைய வார்த்தை வல்லமையுள்ளதாகவும் மற்றும் ஜீவனை அளிக்கிறதாகவும் இருக்கிறது. எனவே உம்மை நோக்கி பார்ப்பதன் மூலம் ஏமாற்றத்தை மேற்கொள்ள முடியும் என்று அறிந்திருக்கிறேன்!