சுய நலத்தின் மாறுவேடமே கவலை

“ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.” – ரோமர் 14:23      

கவலை எவ்வளவு சேதம் விளைவிக்கக் கூடியது என்பதை உணராமல், அனேகந்தரம் மக்கள் கவலைப்படுகின்றனர். அதன் வேருக்குள் நீங்கள் செல்வீர்களென்றால் கவலைப்படுவது பாவமாகும். கவலை நிச்சயமாகவே விசுவாசத்தின் விளைவு இல்லை. ரோமர் 14:23 லே விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அனேகமாக, கவலையென்பது ஒரு குறிப்பட்ட பாவத்தையே சர்ந்திருக்கிறது. அது சுய நலமாகும். பொதுவாக நாம் கவலைப்படும் போது, நம் சுய நலமான விருப்பங்களெல்லாம் எப்படியாக நிறைவேறவில்லை என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருகிறோம். எவ்வளவு சுய நலமான விருப்பங்களைக் கொண்டிருக்கிறீர்களோ அவ்வளவாக கவலைப்படுவீர்கள். அவ்வளவாக உங்கள் வாழ்க்கை மாறிவிடுகின்றது.

தேவன் நாம் அவரை சேவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறார். நாம் நம் வாழ்க்கையை சோர்வுறச் செய்யும் விசாரங்களின்றி வாழ வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. பல்வேறு திசைகளிலே சிதறிப் போகாமல் அவரை சேவிக்க சுயாதீனத்தோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் (1 கொரி 7:34). நம் வாழ்க்கைக்கென்று அவர் கொண்டிருக்கும் நோக்கத்தினின்று இந்த உலக கவலையானது நம்மை கவனச் சிதறல் அடைய செய்யக் கூடியது.

சுய நலமான விருப்பங்களை கண்டு, அதை விட்டு விட தேவன் உங்களுக்கு உதவுமாறு ஜெபியுங்கள். இது உங்கள் வாழ்க்கையை எளிமையாக வைக்கும். கவலையை மேற்கொள்ள உதவும். பின்னர் உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய பெரிய திட்டத்தை முழு இருதயத்தோடு பின்தொடரலாம்.

ஜெபம்

பிதாவாகிய தேவனே, கவலைப்படுவது பாவம் என்று எனக்கு காண்பித்ததற்காக உமக்கு நன்றி. என் சுய நலமான, தேவ பயமற்ற வாஞ்சைகளை விட்டு விட்டு, நீர் எனக்காக கொண்டிருப்பதை பின்தொடர எனக்கு உதவுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon