“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” – எரே 29:11
சுயபரிதாபமானது அழிவை ஏற்படுத்தும் உணர்ச்சியாகும். நம் முன்னாலிருக்கும் சாத்தியக்கூறுகளுக்கும், நம்மை குருடாக்கி, இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் நமக்கிருக்கும் நம்பிக்கையை திருடுகிறது. தங்களைப் பற்றி பரிதவிப்பவர்கள் அனேக சமயங்களிலே நான் ஏன் அதை செய்ய முயற்சிக்க வேண்டும்? நான் தோற்றுப் போகிறேனே என்று நினைத்துக் கொள்வார்கள்.
சுயபரிதாபமானது உண்மையிலேயே விக்கிரக ஆராதனையாகும். ஏனென்றால் அது சுயத்தையே அளவுக்கதிகமாக நோக்குவதாகும். நாம் சுயபரிதாபத்துக்குள்ளாக விழ நம்மை அனுமதிக்கும் போது நாம் தேவனுடைய அன்பையும், காரியங்களை மாற்றக் கூடிய திறனையும் புறக்கணிக்கின்றோம்.
சுயபரிதாபத்திலே இன்னும் ஒரு நாளைக் கூட நீங்கள் விரயமாக்கக் கூடாதென உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நம்பிக்கையை இழந்து உங்களுக்காக நீங்கள் பரிதாபப்படத் தொடங்கும் போது ‘நான் எனக்காக பரிதாபப்பட மாட்டேன். இப்போது என் வாழ்வில் ஒரு கடினமான கட்டத்தில் இருக்கலாம், ஆனால் சிறந்தவற்றிற்காக நம்புவதை நிறுத்த மாட்டேன்’ என்று சொல்லுங்கள்.
உங்கள் நண்மைக்கென்று தேவன் நினைவுகளையும், திட்டங்களையும் கொண்டிருக்கிறார். உங்கள் எதிர் காலத்திற்கான நம்பிக்கையை கொடுப்பதற்காக, உங்கள் நம்பிக்கையையும், நோக்கத்தையும் இயேசுவின் மேல் வைத்தவர்களாக நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் உங்கள் வாழ்க்கையிலே அற்புதமான, ஆச்சரியமான காரியங்கள் நடைபெறும்!
ஜெபம்
தேவனே, எனக்காக நான் பரிதாபப்பட மறுக்கிறேன். சூழ்னிலைகளெல்லாம் கடினமாக இருக்கும் போது, நீர் என் பிரச்சினைகளை விட பெரியவர், எனக்காக ஒரு நல்ல எதிர்காலத்தை திட்டமிட்டு வைத்திருக்கிறீர் என்பதை நினைத்துக் கொள்வேன். உம்முடைய திட்டங்கள் என் வாழ்க்கையிலே நிறைவேற விரும்புகிறேன். உம்மிலே என் நம்பிக்கையை வைக்கிறேன்.