“ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.” – ரோமர் 2:1
நாம் மற்றனைவரிடமும் என்ன தவறு இருக்கிறது என்பதைக் குறித்து சிந்தித்து பேசுவோமென்றால், நம் நடத்தையைப் பற்றி நாம் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மிலே அனேக தவறுகள் இருக்கும் போது மற்றவர்களிடம் இருக்கும் தவறை நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று இயேசு கட்டளையிட்டார். (மத் 7:3-5)
நாம் பிறரை நியாயந்தீர்க்கும் போது, நாம் செய்யும் அனேக காரியங்களிலே நாமும் நியாயந்தீர்க்கப்படுகிறோம் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. நாம் ஏதோவொன்றை செய்து விட்டு அது முற்றிலும் சரியானதே என்று எண்ணுகிறோம். ஆனால் வேறொருவர் அதை செய்யும் போது நியாயந்தீர்க்கிறோமே அது ஏன் என்று ஒருமுறை கர்த்தரிடம் கேட்டேன். தேவன் என் இருதயத்தில் பேசி ‘ஜாய்ஸ்’ நீ உன்னை சென்னிற கண்ணாடி வழியாக பார்க்கிறாய், ஆனால் பிறரையோ பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கிறாய் என்றார்.
அது உண்மையே. நாம் நம் நடக்கைகளுக்கு சாக்குப் போக்கு சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நாம் செய்யும் அதே காரியத்தை வேறொருவர் செய்வாரேயென்றால், அனேக வேளைகளிலே இரக்கமற்று இருக்கிறோம். இதை மாற்றி செய்யும் படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். பிறர் சிறப்பாக இருக்கின்றனர் என்று நினைத்துக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் சொந்த வாழ்க்கையைக் பூதக் கண்ணியின் அடியில் வைத்து விடுங்கள். தேவன் முதலாவது உங்களுடன் இடைபட அனுமதியுங்கள்.. பின்னர் பிறர் வளர உதவும், வேதத்துக்கடுத்த வழியைக் கற்றுக் கொள்வீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, பிறருடைய வாழ்க்கையை ஆராய்வதற்கு பதிலாக, என்னுடைய சொந்த வாழ்க்கையை நான் ஆராய எனக்கு உதவுவீராக. உம்முடைய உதவியோடு என்னில் இருக்கும் பிரச்சினைகளை என்னால் திருத்திக் கொள்ள இயலும் என்றும், பிறர் வளர உதவும் நேர்மறையான, ஆரோக்கியமான வழியையும் கண்டறிய முடியும் என்று அறிந்திருக்கிறேன்.