உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (சங்கீதம் 119:165)
தேவன் சூழ்னிலைகளின் வழியே பல சமயங்களில் நம்மை வழிநடத்துகிறார் என்ற உண்மையைப் பற்றி நான் இந்த பகுதியில் பலமுறை எழுதியுள்ளேன். இது நிச்சயமாக உண்மைதான், ஆனால் சூழ்நிலைகள் மூலம் அவருடைய சத்ததைக் கேட்கவும், கீழ்ப்படியவும் நாம் தயாராக இருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை அறிய சூழ்நிலைகளை மட்டும் பார்க்க நான் பரிந்துரைக்கவில்லை. இந்த புத்தகத்தில் நான் எழுதியிருப்பது போல் சமாதானம் மற்றும் ஞானத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவை கடவுளிடமிருந்து நாம் கேட்பதற்கான முக்கியமான வழிகள், அவற்றை நாம் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஒரு சூழ்நிலை திறந்திருக்கும் கதவைப் போல் தோன்றலாம், ஆனால் நமக்கு சமாதானம் இல்லாவிட்டால் அந்த கதவு வழியாக செல்லக்கூடாது.
சூழ்நிலைகளை மட்டுமே பின்பற்றுவது, நம்மை உண்மையான சிக்கலில் சிக்க வைக்கும். சாத்தானால் சூழ்நிலைகளை உருவாக்க முடியும் ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகத்தில் அவனும் இருக்கிறான். எனவே, நாம் கடவுளிடமிருந்து கேட்கும் பிற வழிகளைக் கருத்தில் கொள்ளாமல், சூழ்நிலைகளை மட்டும் பின்பற்றினால், ஏமாற்றத்தில் விழலாம்.
நாம் கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக செல்ல முடியாது என்பதை அறிவோம். நாம் சமாதானத்தால் வழிநடத்தப்பட வேண்டும், ஞானத்தில் நடக்க வேண்டும். சூழ்நிலைகள் நம்மை வழிநடத்த அனுமதிக்கும் முன், நம் இருதயங்களில் சமாதானத்தின் அளவைச் சோதிப்பதற்கு, நம்மை சோதனை செய்வது எளிது. கடவுளிடம் இருந்து கேட்பதற்கான பாதுகாப்பான வழி, ஆவியானவரால் வழிநடத்தப்படும் விவிலிய முறைகளை ஒருங்கிணைத்து, ஒருவரோடொருவர் இணைந்து செயல்பட அனுமதிப்பதாகும். கடவுளுடைய வார்த்தையின் முழு ஆலோசனையையும் பரிசீலிப்பது எப்போதும் சிறந்தது, நீங்கள் விரும்புவதை ஏற்றுக் கொள்ளும் பகுதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்காதீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: முடிவுகளை எடுக்கும்போது எப்போதும் சமாதானத்தைப் பின்பற்றுங்கள்.