“இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” – ரோமர் 8:37
தேவன் நம் எதிர்காலத்திற்கான கனவுகளைக் கொடுக்கிறார். ஆனால் சில சமயங்களிலே அந்த கனவுகள் முடியாதவைகளாக காணப்படும். அப்போதுதான் பயம் ஏற்படுகிறது. உங்கள் கனவை விட்டு விடாதிருக்க தீர்மாணமாக இருப்பீர்களென்றால் நீங்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துணிச்சலுள்ளவர்களாக இருக்க வேண்டியிருக்கும். துணிவு என்பது பயமின்றி இருப்பதில்லை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அது நீங்கள் பயத்தை உணரும் போது, முன்னோக்கி செல்வதாகும். எனவே உங்களை பயமுறுத்தும் சூழ்னிலைகளை நீங்கள் எதிர் கொள்ளும் போது, பயத்தை உணர்ந்தாலும், முன்னோக்கி செல்ல தைரியத்தையும், துணிவையும் கிருபையாக அருளும் படி ஜெபியுங்கள்.
பயத்தின் ஆவியானது எப்போதுமே நீங்கள் முன்னேறி செல்வதை தடுக்கும். எதிரி, பல நூற்றாண்டுகளாக, மக்கள் முன்னேறாமல் தடுக்க பயத்தை உபயோகித்திருக்கிறான். இப்போது அவன் சூழ்ச்சியை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஆனால் உங்களை நேசிக்கும் கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் ஜெயம் கொள்ளுகிறவராக இருப்பதால், பயத்தை தோற்கடிக்க முடியும்.
பயம் உங்களுக்கு எதிராக வரும் போது, அதை எதிர் நோக்க தீர்மாணமாக இருக்க வேண்டும் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவனை நம்பி, அவர் எப்போதுமே உங்களுடனே இருக்கிறாரென்று அறிந்தவர்களாக உறுதியாக நில்லுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் பயத்தை உணர்ந்தாலும் கூட, நான் ஜெயம் கொள்ளுகிறவன் என்ற உம்முடைய வார்த்தையை நம்புகிறேன். நீர் என்னை நேசிப்பதாலும், எனக்கு ஜெயம் கொடுக்கிறதாலும், நீர் எனக்கு கொடுத்திருக்கும் ஒவ்வொரு கனவையும் என்னால் நிறைவேற்ற இயலும்.