“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” – ரோமர் 8:28
அப்போஸ்தலர் பவுல் ரோமர் 8:28 ல், சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று கூறுகிறார். பவுல் எல்லா காரியங்களும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சகல காரியங்களும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று சொல்வதை கவனியுங்கள்.
பவுல், ரோமர் 12:16 ல், ஜனங்களுடனும், காரியங்களுடனும் உங்களை நீங்கள் ஒத்து செல்கின்றவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். காரியங்களை திட்டமிடுகிறவராகவும், அந்த திட்டம் நிறைவேறாமல் போகுமாயின் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க கூடியவராக இருக்கும்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய முயலுகின்றீர்கள். இந்த சூழ்நிலையை இரண்டு விதமாக பார்க்கலாம். என் திட்டம் எப்போதுமே இப்படித்தான் தோற்று விடுகிறது என்று நினைக்கலாம். சரி பரவாயில்லை இப்போது என்னால் வீட்டிலிருந்து போக இயலவில்லை. இந்த மாற்றம் என் நன்மைக்காகவே. தேவன் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று சொல்லலாம்.
தேவனே உங்கள் மகிமையாகவும், உங்கள் தலையை உயர்த்துகிறவராகவும் இருக்க அனுமதியுங்கள் (சங்கீதம் 3:3). அவர் எல்லாவற்றையும், உங்கள் நம்பிக்கையையும் மனப்பான்மையையும், மனநிலைகளையும், தலை, கைகள், இருதயம் மற்றும் உங்கள் முழு வாழ்க்கையும் உயர்த்த விரும்புகிறார். நினைவில் கொள்ளவேண்டியது, திட்டமிட்டது வாழ்க்கையிலே நிறைவேறாமல் போனாலும் அவர் நல்லவராகவே இருக்கிறார்.
ஜெபம்
தேவனே, நீர் காரியங்களை கட்டுப்படுத்துகிறவராகவும், நன்மைக்கு ஏதுவாக மாற்றுகிறவராகவும் இருக்கிறீர் என்பதை நான் அறிந்திருப்பதால், வாழ்க்கை நான் திட்டமிட்டது போன்று நடக்கவில்லை என்றாலும் நான் அமைதலுடன் இருக்க இயலுகிறது. என்னுடைய திட்டம் நிறைவேறாமல் போனாலும் நன்மையை கண்டுபிடித்து நேர்மறையாக இருக்க உதவுவீராக.