தேவனிடமிருந்து கேட்கும் நண்பர்களைக் கண்டறியவும்

தேவனிடமிருந்து கேட்கும் நண்பர்களைக் கண்டறியவும்

இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். (நீதிமொழிகள் 27:17)

நாம் செவிகொடுத்துக் கேட்டால், கடவுள் நம் உறவுகளைப் பற்றி—நமது திருமணங்கள், நட்புகள், வியாபாரச் சங்கங்கள் மற்றும் சாதாரணமாகப் பழகுபவர்கள் போன்றவற்றைப் பற்றி நம்மிடம் பேசுவார். நம்முடைய வாழ்க்கைக்கான அவருடைய திட்டத்திலிருந்து நம்மைத் திசை திருப்பும்படி தூண்டக்கூடிய நபர்களுடனான நட்பு அல்லது உறவுகளைத் துண்டிக்கும்படி அவர் நம்மைக் கேட்கலாம். நாம் யாருடன் நேரம் செலவிடுகிறோமோ அவர்களைப் போல் எளிதாக மாறலாம். சுயநலம் உள்ளவர்களுடன் நாம் நேரத்தைச் செலவிட்டால், விரைவில் நாம் அடிக்கடி நம்மீது கவனம் செலுத்துவதைக் காணலாம், நாம் என்ன செய்யலாம் அல்லது நமக்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம். இதற்கு நேர்மாறாக, கொடுக்கிற ஒருவருடன் நட்பு கொள்ள கடவுள் நம்மை ஊக்குவிக்கலாம். அப்படிப்பட்ட ஒருவருடன் நேரத்தைச் செலவிட்டால், நாமும் கொடுப்பவர்களாக இருப்போம்.

கடவுளிடமிருந்து உண்மையிலேயே கேட்கும் ஒருவருடன், பரிசுத்த ஆவியானவர் சொல்வதையும், செய்வதையும் உண்மையாகவே உணரும் ஒருவருடன் நேரத்தைச் செலவிடுவது மகிழ்ச்சிகரமானது மற்றும் பயனுள்ளது. ஆவிக்குறிய செவிகளில் மந்தமானவர்களுடன் நேரத்தை செலவிடுவது நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட ஒருவருடன் நாம் இருக்கும் போது அதை உணரலாம். இன்றைய வசனம் “இரும்பு, இரும்பை கூர்மைப்படுத்துகிறது” என்று கூறுகிறது, மேலும் கடவுளின் சத்தத்தைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் சரியான காரியங்களைக் கேட்கும் திறனைக் கூர்மைப்படுத்தலாம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நாம் நட்பு கொள்பவர்களைப் போல் மாறுகிறோம்; “உறுதியான” தேர்வுகளை செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon