தேவனிடம் உங்கள் கவலைகளை கொடுத்து விட்டு உங்கள் இருதயத்தைப் பின்பற்றுங்கள்

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” – 1 பேதுரு 5:7

‘உன் இருதயத்திற்கு உண்மையாய் இரு’ என்று ஒரு பழமொழி கூறுகிறது. இது நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய பாடமாய் இருக்கிறது. நம் இருதயம் நம்மை பின்பற்றும் படி அறிவுறுத்தும் பாதையினின்று விலகி செல்லும் போது, நம் வாழ்க்கையை நாம் கடினமுள்ளதாக மாற்றிக் கொள்கிறோம்.

நான் இங்கே சுயனலமான விருப்பங்களைப் பற்றி பேசவில்லை. தேவன் உங்கள் இருதயத்தில் போடும் விருப்பங்களைப் பற்றி பேசுகிறேன். வாழ்விலே உங்களுக்கு என்ன தேவை? உங்களுக்காக தேவ சித்தம் எது என்று நம்புகிறீர்கள்? அதை தொடர்கிறீர்களா? சிலர் தங்கள் இருதயத்தை பின்பற்றாமல் இருக்க செய்யக்கூடிய அனேக கவலைகளாலும், விசாரங்களாலும் நிரம்பி இருக்கின்றனர். அது அவர்களால் செய்ய இயலாதது என்று தீர்மாணித்து விட்டனர்.

வேதம், தேவன் நம்மை விசாரிக்கிறவராக இருக்கிற படியால் நம் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விட வேண்டுமென்று சொல்கிறது. உங்களின் எந்த கவலையாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் தேவனிடம் கொடுத்து விட வேண்டும். அவர் அதை பார்த்துக் கொள்ள விட்டு விட வேண்டும்.

உங்களுக்குள் அவர் வைத்திருக்கும் விருப்பங்களை நீங்கள் பின்பற்ற வேண்டுமென அவர் விரும்புகிறார். தேவன் உங்கள் கவலைகளையெல்லாம் விசாரிக்க விட்டு விட்டு உங்கள் இருதயத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவரை நம்பலாம். அவர் உங்களை விசாரிக்கிறார்.

ஜெபம்

தேவனே, சில நேரங்களிலே என்னுடைய கவலையினாலும், விசாரங்களாலும் நீர் என் இருதயத்தில் வைத்திருக்கிறதை நான் பின்பற்றாமல் இருக்கின்றேன். எனவே இன்று அவற்றையெல்லாம் உம்மிடம் கொடுக்கின்றேன். நீர் அவற்றையெல்லாம் பார்த்துக்

கொள்வீர் என்று அறிந்திருக்கிறேன். நானோ என் இருதயத்தைப் பின்பற்ற வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்று அறிந்திருக்கிறேன்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon