“உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” – ரோமர் 8:39
துஷ்பிரயோகம் என்பது “தவறாகப் பயன்படுத்துதல், முறையற்ற முறையில் பயன்படுத்துதல், தவறாக நடத்துவதின் மூலம் சேதம் விளைவிப்பது, சாதகமாக பயன்படுத்திக் கொள்வது. துஷ்பிரயோகத்தின் விளைவு பேரழிவு தரக்கூடியதாகவும் மற்றும் நீண்ட காலம் நீடிப்பதாகவும் இருக்கிறது.”
பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் உள்ளன: பாலியல், உணர்ச்சி ரீதியான, வாய்மொழி வழியாக, உடல் ரீதியான துஷ்பிரயோகம். எவ்விதமாக இருப்பினும் அதன் விளைவுகள் எப்போதும் பயங்கரமானவை. இது நீங்கள் சரியாகச் செயல்படுவதைத் தடுக்கும். கடவுளின் அன்பைப் பெறுவதையும் தடுக்கும். மேலும் அவருடைய ராஜ்யத்தின் நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதைத் தடுக்கும்.
இதை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஏனென்றால் எனது குழந்தை பருவத்தில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் இதை நான் நேரடியாக புரிந்து கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக, துஷ்பிரயோகத்தின் வலிமையை மட்டும் நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் கடவுளின் அன்பாகிய மிகப்பெரிய வல்லமையையும் நான் அறிவேன்.
தேவ அன்பின் காரணமாக, எனது கடந்த காலம் எனது எதிர்காலத்தை பாதிக்க வேண்டியதில்லை. நீங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், கடவுள் உங்களை நேசிக்கிறார் என்பதை இன்று புரிந்து கொள்ளுங்கள். அவருடைய அன்பிலிருந்து உங்களை எதுவுமே பிரிக்க முடியாது. உங்கள் கடந்த காலத்திலிருந்து நீங்கள் விடுபட்டு உங்களுக்காக கடவுளின் நல்ல திட்டங்களில் நீங்கள் வாழ அவர் ஒரு வழியை ஆயத்தம் பண்ணி வைத்துள்ளார்.
இயேசுவுடன், புதியதொரு வாழ்க்கைக்கு நம்பிக்கை உள்ளது. இன்று அவருடைய அன்பைப் பெறுவீர்களா?
ஜெபம்
கடவுளே, எனது கடந்த காலத்தில் இருக்கும் எதுவும், உம்முடைய திட்டங்களிலிருந்தும், என் வாழ்க்கைக்கான நோக்கத்திலிருந்தும் என்னைத் தடுக்க நான் விரும்பவில்லை. துஷ்பிரயோகத்திலிருந்து உம் சுகத்தையும், விடுதலையையும் நான் அனுபவிக்கதக்கதாக உம்முடைய அன்பினாலே என்னை மேற்கொள்வீராக.