“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,” – சங்கீதம் 1:1
நம் சமுதாயத்தின் ஒழுக்கக்கேட்டுக்கு மேலாக நாம் வாழ்வது, நம் சம்பாஷனைகளைப் பற்றிய நம் தெரிந்து கொள்ளுதல்கள், நாம் உடையணியும் முறை, நாம் என்ன வாசிக்கிறோம், நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமாக்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. நம் தனிப்பட்ட வாழ்விலே நாம் எவ்வளவு நேர்மையாக வாழ்கின்றோம், நம் வேலைகளிலோ, தொழில்களிலோ எப்படி நம்மை வைத்துக் கொள்கிறோம் என்பதும் இதில் உள்ளடங்கும்.
கிறிஸ்தவர்களாக, தேவனுடைய அளவிலே வாழ ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். உலக ஈர்ப்புகளை எதிர்க்க வேண்டும். நன்றாக அறியப்பட்டிருக்கும் மேற்கோள் நமக்கு நல்ல அறிவுரையைக் கூறுகிறது. ‘உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், ஏனென்றால் அது வார்த்தையாக மாறுகிறது, உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள், ஏனென்றால் அது செயல்களாக மாறுகிறது, உங்கள் செயல்களை கவனியுங்கள், ஏனென்றால் அது பழக்கங்களாக மாறுகிறது; உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், ஏனென்றால் அது குணங்களாக மாறுகிறது; உங்கள் குணங்களை கவனியுங்கள், ஏனென்றால் அது முடிவாக மாறுகிறது.’
தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கும் பெரிய ஈவுகளில் ஒன்று தெரிந்தெடுக்கும் சுய சித்தமாகும். அவர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர் வார்த்தையோடும், அவர் வார்த்தையின் மதிப்பு/ நம்பிக்கைகளோடும் ஒத்து செல்லும் வாழ்க்கை முறை தேர்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அழிந்து போய் விடும், உலக மதிப்புகளை பிரதிபலிக்கும் தேர்வுகளை அல்ல. தேவனை முழுவதுமாக சேவிக்கவும், நீங்கள் செய்யும் அனைத்திலும் அவரை முதண்மையாக வைக்கவும் உங்களை வருந்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெபம்
தேவனே, உலக அளவின் பிரகாரம் வாழ நான் விரும்பவில்லை. நான் என் வாழ்விலே உம்மை முதன்மையாக வைக்கிறேன். ஏனென்றால் உம்முடைய வழிகளே சிறந்தவைகள் என்பதை அறிந்திருக்கிறேன்.