
“நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” – ரோமர் 6:13
தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆவி, ஆத்துமா, சரீரத்துடன் சிருஷ்டித்திருக்கிறார். விசுவாசிகளாக நம் ஆத்துமாவானது, நம் சிந்தை, சித்தம், உணர்ச்சிகளால் ஆனது என்பதை அறிந்திருக்க வேண்டும். அது ‘சுயத்தால்’ நிரம்பியிருந்து பரிசுத்த ஆவிக்கு அடங்கி இருக்க விரும்பாவிட்டால் அது பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.
நமக்கு ஒரு சுய சித்தம் இருப்பதால், நம் மனம், நாம் என்ன நினைக்கிறோம் என்பதை சொல்கிறது. ஆனால் நம் எண்ணங்கள் தேவனுடையவைகளாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இருக்கிறது.
நம் சித்தமானது, தேவன் நமக்காக என்ன செய்ய விரும்புகிறாரோ அதோடு மாறுபட்டாலும் கூட நாம் என்ன விரும்புகிறோம் என்பதை நம் சித்தம் நமக்கு சொல்லுகிறது.
நம் உணர்வுகள், நம் உணர்ச்சிகளை தீர்மாணிக்கிறது. ஆனால் கிறிஸ்துவுக்குள் நம் இருதயம் தேவனுக்கும் அவரது வார்த்தைக்கு மட்டும் தான் அடங்கி இருக்க வேண்டும்.
தேவன் நம்முடைய எண்ணங்களையும்/சிந்தைகளையும், விருப்பங்களையும், உணர்ச்சிகளையும் அவருடையதைக் கொண்டு மாற்றியமைக்க விரும்புகிறார். அப்படியாகும் வரை நம்மால் பாவத்தின் மேல் ஜெயம் மேற்கொள்ள இயலாது.
உங்கள் ஆத்துமாவிலே தேவனுடைய வழியை மட்டுமே நீங்கள் விரும்புவதாக சொல்லுங்கள். ரோமருக்க்கு எழுதிய நிருபத்திலே, பவுல் நாம் நம்மை அவருக்கு பலியாக கொடுக்க வேண்டுமென்று உற்சாகப்படுத்துகிறார். உங்கள் ஆத்துமாவை உங்களுக்கென்று உபயோகிக்காமல் உங்களை முழுவதுமாக தேவனுக்கு அர்ப்பணிக்க இன்றே தீர்மாணிப்பீர்களாக.
ஆத்துமா சுத்திகரிக்கப்படும் போது, தேவனுடைய சிந்தனைகளையும், விருப்பங்களையும், உணர்ச்சிகளையும் சுமந்து செல்ல அது பயிற்றுவிக்கப்படுகின்றது. பின்னர் அவருடைய மகிமையை வெளிப்படுத்த ஒரு வல்லமையான கருவியாகி விடுவீர்கள்.
ஜெபம்
தேவனே, என் மனம், சித்தம், உணர்ச்சி சில சமயங்களிலே உம்முடைய வார்த்தைக்கு எதிராக போராடுகின்றது. ஆனால் அப்படியாக நான் இனியும் வாழ விரும்பேன். பிதாவே என் ஆத்துமாவை உம்மிடம் அர்ப்பணித்தால் என்னை சுத்திகரித்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற என்னை உபயோகிப்பீர் என்று அறிந்தவளாக அர்பணிக்கின்றேன்.