
“ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” – நீதி 11:14
மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள், “நான் கடவுளின் சத்தியத்தில் நடக்கிறேனா அல்லது என் உணர்ச்சிகளுக்கு ஏற்ப நடக்கிறேனா என்பதை நான் எப்படி உறுதியாக அறிந்து கொள்வது?” என்று. பதில் பொறுமையில் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.
உணர்ச்சிகள் நம்மை அவசரப்படுத்துகிறது. நாம் ஏதாவது செய்ய வேண்டும், இப்போதே அதைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறது! ஆனால்,தெய்வீக ஞானமோ, நாம் என்ன செய்ய வேண்டும், எப்போது அதைச் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான படத்தைப் பெற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கும் படி சொல்கிறது. தேவ ஞானம், நாம் முடிவு எடுப்பதற்கு முன் ஞானமான வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் நாட வேண்டுமென்று சொல்கிறது.
நாம் தேவனுடைய கண்ணோட்டத்தில் நம் சூழ்நிலையை பார்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நாம் எப்படி உணர்கிறோம் என்பதை விட நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். அவருடைய ஞானத்தையும், அவர் நம் வாழ்வில் வைத்துள்ள மக்களின் ஞானத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு கடினமான முடிவையும் எதிர்கொள்ளும்போது, பின்னர் வருத்தப்படாமல், ஒரு தெளிவான பதில் கிடைக்கும் வரை காத்திருங்கள். உணர்ச்சிகள் அற்புதமானவை, ஆனால் அவை ஞானத்திற்கும், அறிவிற்கும் மேலான இடத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. தேவனுடைய வழி நடத்துதலை நாடுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் உங்களுக்குக் காட்டட்டும்.
ஜெபம்
தேவனே, நான் விரைந்து முடிவுகளை எடுத்து, என் உணர்ச்சிகளால் வழி நடத்தப்பட அனுமதிக்க மாட்டேன். நான் எடுக்கும் தேர்வுகளுக்கு உம்முடைய புத்திசாலித்தனமான வழிகாட்டுதலைத் தேடுவதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன்.