“அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.” – ரோமர் 5:2
உங்களுக்கும் எனக்கும் நம்பிக்கைக்குரிய வாக்குத்தத்தங்களால் வேதம் நிரம்பியுள்ளது. தேவனின் பிரசன்னத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம். அவர் நம் நோய்களைக் குணமாக்க விரும்புகிறார். அவர் நம்முடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வார். இன்னும் பல உள்ளன… எண்ணுவதற்கு அதிகமானவை! அதனால் தான், விசுவாசமின்மை காரணமாக கிறிஸ்தவர்கள் தேவனின் வாக்குத்தத்தங்களை இழந்து போகும் போது அது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கேள்வி: அந்த வாக்குத்தத்தங்களை எதிர்பார்க்கிறீர்களா? கடவுளின் தயவை ஒரு வழக்கமான அடிப்படையில் அனுபவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில், நீங்கள் சந்தோஷப்படும்போது நல்ல நண்மையான காரியங்கள் உங்களுக்கு நடக்கத் தொடங்குகின்றன.
லூக்கா 2:52, இயேசு தேவ தயவிலும், மனுஷ்ர் தயவிலும் அதிகமாய் விருத்தியடைந்தார் என்று சொல்கிறது. நீங்களும் நானும் கடவுளின் தயவை விசுவாசத்தினால் அடைய இயலும்.
இயேசுவைப் போலவே நாமும் அவருடைய தயவிலே விருத்தியடைந்து அவருடைய வாக்குத்தத்தங்களை அனுபவிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் அந்த காரியங்களை நீங்கள் இப்போது காணாவிட்டாலும், அவை நடைபெறும் என்று தெரிந்து, நீங்கள் மகிழ்ச்சியடைந்து, தேவன் மீது உங்கள் நம்பிக்கை வைக்கலாம்.
வேதத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட அனைத்தும் நமக்கானவை. ஆகவே, இப்போதே கடவுளின் மகிமையை அனுபவிப்போம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் நம்ப முடியாத காரியங்களைச் செய்வார்.
ஜெபம்
தேவனே, எனக்கான உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் எதிர்பார்க்கிறேன், அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன். நீர் உம்முடைய வார்த்தையில் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவீர் என்று நான் நம்புகிறேன்.