
“அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.” – சங்கீதம் 107:20
பலர் கடவுளுடைய வார்த்தையாகிய மருந்தை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக சுகமடைதலில் நம்பிக்கையை வைக்கும் தவற்றை செய்கிறார்கள். வார்த்தையைப் பயன்படுத்தாமல் “சுகமடைவதை நான் நம்புகிறேன்” என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் மருந்தை எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன நண்மை கிடைக்கும்?
தேவனுடைய வார்த்தை தான் மருந்து – இது ஒரு குணப்படுத்தும் பொருள். ஒரு மருந்து எப்படி சுகப்படுத்தும் பொருளாக இருப்பதைப் போல இதுவும் சுகத்தை ஏற்படுத்தும் பொருளாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மருந்தில் குணப்படுத்துவதற்கான திறன் உள்ளது. தேவனுடைய வார்த்தையில் இந்த திறன் இருக்கிறது. உங்கள் சரீரத்திற்கு சுகத்தைக் கொடுக்கும் திறன், வாழ்க்கை திறன் மற்றும் இயல்பு இதற்கு இருக்கிறது.
எனவே இதை எப்படி எடுத்துக்கொள்வது? கடவுளுடைய வார்த்தை உங்கள் இருதயத்தில் நிலைத்திருந்தால் மட்டுமே உங்கள் சரீரத்தில் அது குணமளிக்கிறது. அறிவு மட்டும் அதை செய்யாது. உங்கள் சரீரத்தில் குணமடைய வேத வார்த்தையை படிப்பதின் மூலமாக, கேட்பதின் மூலமாக, ஆழமாக யோசிப்பதின் மூலமாக, உங்கள் மனதில் மீண்டும் மீண்டுமாக அதை யோசித்துப் பார்ப்பதின் மூலம், உங்கள் மனதையும், இருதயத்தையும் அது ஊடுருவ வேண்டும். வார்த்தை உண்மையில் உங்கள் இருதயத்தில் ஊடுருவினால், அது உங்கள் சரீரத்திற்கு ஆரோக்கியத்தைக் கொண்டுவரும். இன்று தேவனுடைய வார்த்தை உங்கள் இருதயத்திற்குள் செல்லட்டும்.
ஜெபம்
தேவனே, உம்முடைய குணப்படுத்தும் வார்த்தையை தியானிக்க நான் இன்று தெரிந்து கொள்கிறேன். உம்முடைய வார்த்தை என் இருதயத்தில் ஆழமாக இருப்பதால், உம்முடைய குணப்படுத்துதல் என் சரீரத்தை நிரப்பும் என்பதை நான் அறிவேன்.