
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” – யோவாண் 15:5
நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, கனமானதை தேவன் தூக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அனேக சமயங்களில் நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதைப் பார்த்து, அதை நம்முடைய சொந்த பலத்தின் மூலம் சரிசெய்ய முயற்சிக்கிறோம், ஆனால் அது ஒருபோதும் நல்லதல்ல. இயேசு யோவான் 15:5-ல், ‘என்னாலன்றி உங்களால் ஒன்றும் செய்ய இயலாது’ என்றார்.
நாம் தன்னிறைவு பெற முயற்சி செய்யலாம், ஆனால் நாம் செய்ய வேண்டியதைச் செய்வதற்கான கிருபையையும் திறனையும் தேவனே நமக்கு வழங்க அனுமதிக்க வேண்டும்.
நம் மன விருப்பமும், உறுதியும் நாம் தொடங்குவதற்கு உதவும், ஆனால் அவை பொதுவாக நீடிக்காது, நடுவில் நம்மை குழப்பத்திற்குள்ளாக்கி விடும்.
நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவன் இடைபட அழைப்பதின் மூலம், இயேசு நமக்காக மரித்து, நமக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க நாம் கற்றுக்கொள்ளலாம். இயேசு சொன்னார், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்” (மத்தேயு 11:28).
தேவன் இல்லாமல் நாம் செயல்பட உருவாக்கப்படவில்லை. அவருடன் நாம், அதிகப்படியான உணவு உட்கொள்வது, போதை பழக்கம், பொருள் துஷ்பிரயோகம், மோசமான நேர மேலாண்மை, கோபப் பிரச்சினைகள் போன்ற எந்த பிரச்சினைகளையும் நாம் உடைக்க முடியும். உங்களிடம் உள்ள எந்த பிரச்சனையையும் விட இயேசு பெரியவர்.
ஜெபம்
தேவனே, நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை என்று எனக்குத் தெரியும், எனவே என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் நான் உங்களை அழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் உம்மை நம்பி, பின்பற்றி பளுவான காரியங்களை நீர் சுமப்பதற்கு அனுமதிக்கிறேன்.