
“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” – 1 கொரிந்தியர் 3:16
நான் அவ்வப்போது தேவனுடன் நேரம் செலவழிப்பது உண்டு அல்லது என் வாழ்க்கை ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கும்போது, செலவழிப்பது உண்டு. நாளடைவில் நான், ஒரு அவசர காலத்திலிருந்து அடுத்த அவசர காலத்திற்கு செல்வதை தடுக்க வேண்டுமென்றால் தேவனை ஒவ்வொரு நாளும் பெரிய தேவை இருக்கும் போது எப்படி தேடுவோமோ அப்படியாக தேட வேண்டுமென்று கற்றுக்கொண்டேன்.
நாம் தேவனிடம் விரும்புவது அவர் நமக்கு எப்போதுமே உதவுவார் என்பது உண்மையே. ஆனால் நமக்கு தொடர் வெற்றி வேண்டுமென்றால், நாம் தேவனை ‘அவசரம் மட்டும்’ என்ற பெட்டியில் இருந்து வெளியே எடுத்து நம் அன்றாட வாழ்வுக்குள் அழைக்க வேண்டும்.
தேவன் நாம் அவருடன் தனிப்பட்ட உறவு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நம்முள் வாழ்வதன் மூலம் இதை நிரூபிக்கிறார்.
இயேசு சிலுவையிலே மரித்த போது, நாம் சர்வ வல்லமையுள்ள தேவனுடன் தனிப்பட்ட முறையிலே உறவு கொண்டிருக்க வழியை திறந்தார். தேவன் நாம் ‘அவசரம் மட்டுமே’ உறவை விரும்பி இருப்பார் என்றால், அவர் அவ்வப்போது மட்டுமே சந்திப்பார். நிரந்தரமாக நம்முள் வாசம் செய்யமாட்டார்.
என்ன ஒரு அற்புதமான சிந்தை! தேவன் உங்களுடைய தனிப்பட்ட நண்பர்! இன்று அவரை உங்களுடைய ‘அவசரம் மட்டும்’ பெட்டியில் இருந்து விலக்கி விடுவீர்களா?
ஜெபம்
தேவனே, கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ‘அவசரம் மட்டுமே’ அவசர திட்டத்தை விட மேன்மையானது என்பதை அறிந்திருக்கிறேன். நீர் என்னுள் வாழ்வதால் உம்மை என்னுடைய தனிப்பட்ட நண்பனாக இருக்க விரும்புகிறேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது மட்டுமே உண்மை கூப்பிடாமல் ஒவ்வொரு நாளும் உம்மை நாடி தேட விரும்புகிறேன்.