தேவனை உங்களுடைய ‘ஒன்றே’யாக மாற்றிக் கொள்ளுங்கள்

தேவனை உங்களுடைய ‘ஒன்றே’யாக மாற்றிக் கொள்ளுங்கள்

“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” – சங்கீதம் 27:4

வாழ்க்கை சிக்கலாக இருக்க வேண்டுமென்பதில்லை. இயேசு நாம் பிரச்சினையில் உள்ளவர்களாகவும், விரக்தியடைந்தவர்களாகவும் ஒரு நிர்பந்தமான வாழ்க்கை வாழ மரிக்கவில்லை. யோவாண் 10:10 சொல்வதாவது, நாம் ஜீவனைப் பெற்றிருக்கவும், வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கவே மரித்தார் என்று கூறுகிறது. எல்லாமே சிக்கலாய் இருக்கும் தருணத்தில் தான் சந்தோசம் திருடப்பட்டு விடுகிறது. நாம் அதிக மன அழுத்தத்திற்குள்ளாகி, அதிகமான அலுவல் நிறைந்த வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கு எதிரான வாழ்க்கை முறை எளிமையான வாழ்க்கையாகும். எளிமையென்றால் எந்த கலப்படமும் இல்லாத ஒரு காரியம். ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்வதைப் பற்றி தேவன் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதை செய்யும் ஒரே வழி ‘ஒன்றைப் பற்றியதே’யாகும்.

தேவன், நாம் அவரையே பற்றி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர் தமது வார்த்தையிலே, நாம் அவ்ரிடம் ஒரு சிறு பிள்ளையைப் போல வந்து ‘உம்மை நம்புகிறேன்’ என்று சொல்லாவிட்டல் அவருடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்க மாட்டோமென்று சொல்லியிருக்கிறார்.

இது மிகவும் சுலபமானதாக தெரிகிறதல்லவா? இதை இன்னும் சிக்கலானதாக மாற்ற நீங்கள் விரும்பலாம். ஆனால் நான் அப்படி செய்ய விரும்பவில்லை. உங்களுக்கான தேவனுடைய திட்டம் எளிமையானதே. அது உங்களுக்கு புரியாமலிருக்கலாம், ஆனால் தேவனிடம் எந்த சிக்கலும் இல்லை, நீங்களும் சிக்கலாக்கி கொள்ள விரும்ப வேண்டாம். இன்றே அவரிடம் வந்து ‘நான் விசுவாசிக்கிறேன்’ என்று சொல்லி உங்களுடைய ஒரே காரியமாக அவரை மாற்றிக் கொள்ளுங்கள்.


ஜெபம்

தேவனே, உம்மை நம்புகிறேன். நான் சிக்கல்களால் பாரப்பட்டு வாழ விரும்பவில்லை. எனவே இன்று நான் ‘ஒன்றாகிய’ உம்மை தேடுவதின் மூலம் எளிமையான வாழ்க்கையை நாடுகிறேன். எனக்கான உம்முடைய திட்டத்திற்குள்ளாக என்னை நடத்துவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon