தேவன் உங்களிடம் பேசுவதைக் கேட்டு கீழ்படியுங்கள்

தேவன் உங்களிடம் பேசுவதைக் கேட்டு கீழ்படியுங்கள்

“அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.” – உபா 5:29

தேவன் ஊழியத்தில் தலைவர்களுடன் மட்டும் பேசுவதில்லை. அவருடன் தனிப்பட்ட உறவில் இருக்கும் எல்லோரிடமும், எல்லா நிலையிலும் பேசுகிறார். நிறைய பேர் கடவுளிடமிருந்து கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் உண்மையில், அவர் நம் அனைவரிடமும் பேசுகிறார். அவர் உங்களிடமும் பேசுகிறார்.

நிச்சயமாக, நீங்கள் அவரின் சத்தத்திற்கு செவி கொடுக்காவிட்டால், நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க முடியாது. அவர் சொல்வதைச் செய்ய முடியாது. உங்கள் வேதத்தை நீங்கள் வாசிப்பதின் மூலமும் அவரிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொள்ள உங்கள் இருதயத்தை ஆயத்தப்படுத்துவதின் முலமும் நீங்கள் அவரைக் கேட்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கலாம்.

உபாகமம் 5:29 ஐப் படியுங்கள். அவர் அந்த கூற்றை சொல்லும் போது அவரது குரலைக் கேட்க முடிகிறதா? நாம் அவருடைய கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் நம்முடைய நல்வாழ்வைப் பற்றி அக்கறை காட்டுகிறார். மேலும் அவர் நம்மைக் கவனித்துக் கொள்ள ஒரே வழி, நாம் அவருக்கு செவி கொடுத்து கீழ்ப்படிய மனமுவந்திருப்பதின் மூலம் மட்டுமே.

இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவை உங்கள் வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையின் படி செய்பவராக இருங்கள். அவருடைய ஞானத்தைக் கேட்டு அதைப் பின்பற்றுங்கள்.


ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னிடம் பேசுகிறீர் என்று நான் நம்புகிறேன், உம்முடைய சத்தத்தை நான் அறிய விரும்புகிறேன். எனக்கு நண்மையுண்டாகும் படி, நான் உமக்கு செவி கொடுத்து, நான் செய்ய வேண்டுமென்று நீர் சொல்வதை நான் செய்ய தீர்மாணிக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon