“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” – ஆதி 50:20
தேவன் இதை சிறிது நேரத்திற்கு முன்பு என் இருதயத்தில் பேசினார்: ஜாய்ஸ், நீ உன் மூக்குவரை தான் பார்க்கிறாய் (அது வெகு தொலைவு அல்ல), மேலும், அதைப் பார்த்து, நன்றாக தோன்றவில்லையெனில் அது நல்லதல்ல என்று நினைத்துக் கொள்கிறாய். ஆனால் நான் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்க்கிறேன், ஏனென்றால் நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். நான் ஆரம்பம், முடிவு மற்றும் உங்களுக்குத் தெரியாத பல காரியங்களை அறிந்திருக்கிறேன். நாம் பகுதியைத் தான் அறிந்திருக்கிறோம்… ஆனால் தேவனோ அல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
ஆதியாகமம் 50:20 ல், யோசேப்பு தன்னை பயங்கரமாக, துஷ்பிரயோகம் செய்த தன் சகோதரர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் அவனை ஒரு குழிக்குள் எறிந்து அடிமையாக விற்றபோது, அவர்கள் அவனுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்தார்கள். ஆனால் உண்மையில், அந்த சோதனைகளை உபயோகித்து யோசேப்பை மிகுந்த செல்வாக்குள்ள இடத்திற்கு உயர்த்த தேவன் திட்டமிட்டிருந்தார்.
சில நேரங்களில் மோசமானவை என்று நாம் நினைக்கும் காரியங்களே, ஒரு பெரிய ஆசீர்வாதமாக மாறும். மிகப் பெரிய சோதனைகள் உங்களில் மிகப்பெரிய நம்பிக்கையை வளர்க்கும். நீங்கள் ஒருவேளை படுகுழியின் ஆழத்தில் இருக்கலாம். ஆனால் தேவன் அந்த படுகுழியைப் பயன்படுத்த, அவருடைய அழைப்புக்கு நேராக உயர்த்த சித்தமுள்ளவராயிருக்கிறார். நினைவில் கொள்ளுங்கள், தேவனால் அனைத்தையும் பார்க்க முடியும். மேலும் அவர் அந்த சோதனைகளை உங்கள் நன்மைக்காக பயன்படுத்துவார்.
ஜெபம்
தேவனே, “என் மூக்கைக் கடந்து” என்னால் பார்க்க முடியாது. ஆனால் நான் உம்மை நம்புகிறேன், ஏனென்றால் நீர் அனைத்தையும் பார்க்கிறீர் என்று அறிந்திருக்கிறேன். நீர் என் சோதனைகளை எடுத்து அவற்றில் இருந்து நல்லதை வெளியே கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.