ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். (நீதிமொழிகள் 9:9)
நாம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ வேண்டும் என்று தேவன் விரும்பினாலும், சில சமயங்களில் அவர் அதிருப்தியை அல்லது ஏதோ சரியில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறார், ஏனென்றால் நாம் பழைய காரியங்களைத் தொடர்ந்து செய்வதை அவர் விரும்புவதில்லை. அவரைத் தேடுவதற்கு, அவர் நம்மைத் தூண்ட விரும்புகிறார், அதனால் அவர் நம்மை புதிய நிலைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும்.
நாம் பலமாக வளரவும், ஆழமாக செல்லவும், அவருடன் நெருக்கத்தை அதிகரிக்கவும் எப்போதும் விரும்புகிறார். பெரும்பாலான நேரங்களில், கடந்த காலத்தில் நாம் நன்றாக இருந்த இடங்களிலிருந்து நம்மை வெளியே கொண்டு வருவதன் மூலம், அவர் நம்மை அந்த முதிர்ச்சிக்கு நேராய் அழைத்துச் செல்கிறார். நீண்ட காலமாய் அதிக ஆறுதல் இருந்தால், நாம் வளரவில்லை என்று அர்த்தம். உங்கள் இருதயத்தில் உங்களுக்குப் புரியாத ஏதோ ஒன்று கிளர்ச்சியடைவதாக நீங்கள் உணர்ந்தால், என்ன நடக்கிறது என்று கடவுளிடம் கேளுங்கள், அவரின் பதிலுக்காகக் காத்திருக்கவும்.
நமது வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் கடவுளுடனான நமது நேரம் மிகவும் முக்கியமானது. ஆனால் நம்மால் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியான காரியங்களைச் செய்ய முடியாது. கடவுள் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்க முடியாது. வேதத்தைப் படிப்பது கடினமானதாக தோன்றிய நேரங்கள் எனக்கு உண்டு, சில மாதங்களுக்கு, வேறு ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்க கடவுள் என்னை வழிநடத்தினார். அந்த சிறிய மாற்றம் புதிய வளர்ச்சியைக் கொண்டு வந்தது. ஏனென்றால் நான் காரியங்களை வேறு வழியில் பார்த்தேன். நான் வேதத்தைப் படிக்க விரும்பாததால், சாத்தான் என்னைக் கண்டிக்க முயன்றான், ஆனால் நான் வாசித்துக்கொண்டிருந்த மொழிபெயர்ப்பில் மாற்றம் செய்ய கடவுள் முயன்றார். ஒரு நாள், நான் படித்த பின், பிரார்த்தனை செய்ய முயற்சித்தபோது சற்றே சலிப்பாக உணர்ந்தேன், அதனால் நான் என் அலுவலகத்தில் உள்ள மற்றொரு நாற்காலியில் சென்று உட்கார்ந்தேன், திடீரென்று என் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் விஷயங்களைக் கண்டேன், ஆனால் நான் அவற்றை முன்பு கவனித்ததில்லை. ஒரு சிறிய சரிசெய்தல், ஒரு புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்க எனக்கு வழிவகுத்தது. நான் வேறு நாற்காலியில் அமர்ந்ததால் தேவன் எனக்கு ஒரு ஆவிக்குறிய பாடத்தைக் கற்பித்தார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் நாற்காலியின் இருப்பிடத்தை மாற்ற பயப்பட வேண்டாம்.