ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (மத்தேயு 10:29-31)
பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம், ஆண்டவர் ஒவ்வொரு நாளும் உங்களிடம் பேச விரும்புகிறார்.அவர் உங்களை, உங்கள் பிரச்சினையில் இருந்து ஒவ்வொரு படியாய் விலக்கி, உங்களுக்காய் வைத்திருக்கும் ஆசீர்வாத்திற்கு நேராய் வழி நடத்த விரும்புகிறார்..உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகச் சிறிய காரிரங்களையும் அவர் கவனித்துக்கொள்கிறார். இன்றைய வசனத்தின்படி, உங்கள் தலையில் எத்தனை ரோமம் உள்ளது என்பதைக் கூட அவர் கண்காணிக்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் ஆசைகளைப் பற்றி அக்கறையுள்ளவ்ராயிருக்கிறார், மேலும் அவர் உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறார், அது உங்களை கவலை மற்றும் பயத்திலிருந்து விடுவிக்கும்.
சங்கீதம் 139:16ல் நீங்கள் படிப்பது போல், உங்களுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்வதற்கான கடவுளின் திட்டம், நீங்கள் பிறப்பதற்கு முன்பே இருந்தது: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது”. கடவுள் நம் எல்லா நாட்களையும் அறிந்திருக்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டால், அவர் நம்மை வழிநடத்துகிறார் என்று நம்பினால், நம் வாழ்க்கைக்கான அவருடைய திட்டம் நிறைவேறுவதைக் காண்போம்.
பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்க முடியும் என்பது, புரிந்துகொள்ள முடியாததாகத் தெரிகிறது, ஆனால் அவர் குழப்பத்தை எடுத்து அதை அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள ஒன்றாக மாற்ற முடியும் என்பதை அறிவது பெரும் சமாதானத்தைத் தருகிறது. கடவுளை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுங்கள், ஏனெனில் அவருடைய திட்டம் அவருடனான நெருக்கமான உறவின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் சிட்டுக்குருவிகளைக் கூட கண்காணிக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள் – இன்று உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், அவர் நிச்சயமாக கட்டுப்பாட்டில் இருக்கிறார்.