
“நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.” – மல் 3:6
எதுவும் மாறாது… நான் எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகிறேன்… என் நிலைமை ஒரு போதும் மாறாது… அவன் ஒரு போதும் மாற மாட்டான்… அவள் ஒருபோதும் மாற மாட்டாள்… நான் ஒருபோதும் அவரைப் போன்று இருக்கப் போவதில்லை என்றெல்லாம் நாம் ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறோம்?
ஒருபோதும் மாறாத ஒரே விஷயம் தேவன் மட்டுமே. மற்ற அனைத்தும் மாறலாம்.
ஆனால் உங்கள் சூழ்நிலையில் மாற்றத்தைக் காண்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றால், மாற்றம் ஒருவேளை வராமலே போய் விடலாம். நாம் நம்முடைய நம்பிக்கையை தேவன் மேல் வைத்து விட்டு, நம்மால் கட்டுப்படுத்த முடியாத எந்த சூழ்நிலைகளையும் பார்ப்பதை நிறுத்தினால், நாம் பல கடினமான விஷயங்களை சகித்துக் கொண்டு உணர்ச்சி ரீதியாக கஷ்டப்பட வேண்டியதில்லை என்பதை அறிவீர்களா?.
இங்கே ஒரு நல்ல செய்தி: நீங்கள் முடிவு செய்தால் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்! ஆனால் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியை அனுபவிப்பது கடவுளுடைய சித்தம் என்று நீங்கள் உண்மையிலேயே நம்ப வேண்டும். பின்னர் உங்கள் சரீர ரீதியான, மன ரீதியான, ஆவிக்குறிய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத, அந்த மகிழ்ச்சியில் நுழைய நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தேவன் மாறாதவர், ஆனால் நீங்கள் அவரை அனுமதித்தால் அவர் உங்களை மாற்ற முடியும்.
ஜெபம்
தேவனே, சில சமயங்களில் என் சூழ்நிலைகள் ஒருபோதும் மாறாது என நினைக்கிறேன், ஆனால் நீர் அவற்றை மாற்ற முடியும், என்னையும் மாற்ற இயலும் என்று எனக்குத் தெரியும். உம்முடைய மகிழ்ச்சியைப் பெற நான் தேர்வு செய்கிறேன். என் வாழ்க்கையை நீர் மாற்ற உம்மை நான் நம்புகிறேன்.