தேவன் நம்முடைய ஆதாரம், உலகம் அல்ல

தேவன் நம்முடைய ஆதாரம், உலகம் அல்ல

“விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.” – 2 கொரிந்தியர் 9:10

தேவனுடைய பொருளாதார அமைப்பு உலக அமைப்பைப் போன்றது அல்ல. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் தேவன் நம்மை நேசிக்கின்றார்.

உலக பொருளதார அமைப்புகள் பெரும்பாலும் நிலையற்றவை ஆனால், கடவுளின் அன்பு ஒருபோதும் மாறாது. அது நமது வாழ்வின் உறுதியான அடித்தளமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, கடவுள் நமக்கு உதவ விரும்புகிறார். நம்முடைய எளிய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்வதற்கு அவர் நமக்கு உதவுவார்.

2 கொரிந்தியர் 9:10, கடவுள் நம் தேவைகளை பூர்த்தி செய்வார், உண்பதற்கு ஆகாரத்தை கொடுப்பார் என்று சொல்கிறது. கடவுள் நம் தேவைகளை பூர்த்தி செய்கிறார். எனவே நம் வேலை நம்முடைய ஊற்றல்ல – தேவனே. ஆகவே, வேலைகள் மற்றும் முதலீடுகள் மறைந்து போகும் போது நாம் நம்பிக்கையற்றவர்களாக உணர வேண்டியதில்லை. ஏனென்றால் தேவன் நம் எல்லைக்குட்பட்டவரல்ல. வேறு வழிகளில் அவர் நமக்கு தேவயானதை வழங்க முடியும். நாம் கற்பனை செய்யாத வழிகளில் அல்லது கண்டிராத வழியில் நமக்கு கொடுப்பார்.

தேவன், பறவைகளை கவனித்துக் கொண்டால், அவர் நமக்கும் வழங்குவார் என்று நம்பலாம் என்று மத்தேயு 6:26 நமக்கு உறுதியளிக்கிறது. தேவன் உங்களை கவனித்துக்கொள்ள முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


ஜெபம்

தேவனே, உண்மையுள்ள, நம்பகமான ஆதாரமாக இருப்பதற்கும், எனக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியதற்கும் நன்றி. என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் என் தேவைகளை பூர்த்தி செய்ய உம்மை மட்டுமே நம்புகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon