தேவன் நம்மை மென்மையாக வழிநடத்துகிறார்

தேவன் நம்மை மென்மையாக வழிநடத்துகிறார்

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:11)

தேவன் நம்மிடம் பேசி நம்மை வழிநடத்தும் போது, அவர் நம்மிடம் சத்தமிடுவதில்லை அல்லது நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அந்த திசையில் நம்மை தள்ளுவதில்லை. அவர் நம்மை ஒரு மென்மையான மேய்ப்பனைப் போல வழிநடத்துகிறார், பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கு அவரைப் பின்தொடர்ந்து செல்ல நம்மை அழைக்கிறார். அவரது குரலுக்கு நாம் மிகவும் உணர்திறன் உள்ள நிலைக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார், “ஆண்டவரே, நீர் என்ன சொல்கிறீர்?” என்று நம்மைக் கேட்க வைப்பதற்கு ஒரு சிறிய எச்சரிக்கை செய்தி போதுமானது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மாற்றி அவர் நம்மை வழிநடத்துவதை நாம் உணரும் அந்த நிமிடம், நாம் உடனடியாக அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் செய்யும் ஒரு காரியத்தில் சமாதானமின்மை இருப்பதை உணர்ந்தால், நாம் நிறுத்தி, அவருடைய வழிநடத்துதலுக்காக அவரைத் தேட வேண்டும்.

நீதிமொழிகள் 3:6 சொல்கிறது, உன் வழிகளெலெல்லாம் அவரை நினைத்துக் கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார். தேவனை அங்கீகரிப்பது என்பது அவருக்கு போதுமான மரியாதை, போதுமான பயபக்தி மற்றும் பயம், நம் ஒவ்வொரு அசைவையும் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றிய கவலையையும் கொண்டிருப்பதாகும்.

ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கான ஒரு நல்ல வழி ஜெபிப்பது:

“ஆண்டவரே, நீர் என்ன நினைக்கிறீர் என்பதில் நான் அக்கறை கொண்டுள்ளேன், மேலும் நீர் செய்ய விரும்பாதவற்றை நான் செய்ய விரும்பவில்லை. நீர் செய்யக் கூடாது என்று சொன்ன எதையாவது இன்று நான் செய்யத் தொடங்கினால், தயவுசெய்து அது என்னவென்று எனக்குக் காட்டும், அதனால் நான் அதைத் தடுத்து நிறுத்தவும், அதிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக உமது விருப்பத்தைச் செய்யவும் முடியும். ஆமென்.”


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: மற்ற எதையும் விட கடவுள் என்ன நினைக்கிறார் என்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon