தேவன் பாலியஸ்டரையா, டெனிமையா எதை தெரிந்து கொள்கிறார்?

தேவன் பாலியஸ்டரையா, டெனிமையா எதை தெரிந்து கொள்கிறார்?

“கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.” – 1 சாமு 16:7

சிலர் உடையணியும் விதம் குறித்து நான் மிகவும்  நியாயந்தீர்ப்பதுண்டு. நான் ஒரு கருத்தரங்கிலோ, கூட்டத்திலோ போதிக்கும் போது ஜீன்ஸ் அணியக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் என் மகன் என்னிடம், “தேவன் டெனிமை விட பாலியெஸ்டரை அபிஷேகம் செய்கிறார் என்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா?” என்று கேட்டான்.

தேவன் அனேகரை சென்றடைய என் கண்ணோட்ட்த்தை புதுப்பிக்க விரும்பிய போது நான் என்னுடைய பக்திக்குறிய மனப்பான்மையையே பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இத்தகைய கேள்விகள் தேவைப்பட்டது.

நிச்சயமாக, நாம் தேவாலயத்திற்குச் செல்லும்போது நன்றாக உடை அணிவது நல்லது. ஆனால் அதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நம்முடைய வெளிப்புற தோற்றத்தில் நாம் அவ்வளவு கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நமது முக்கிய குறிக்கோளை நாம் இழக்கிறோம்: கடவுளுடன் நெருக்கமான, தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாம் வெறுமனே அவருடன் உறவாய் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், அதாவது நம்முடைய நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரான ஒருவருடன் நாம் தொடர்பு கொண்டிருப்பதைப் போலவே அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும். அவர் வெளிப்புற தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை… உண்மையான உறவைப் பற்றியே அதிக கவலையுள்ளவராய் இருக்கிறார்.

அவருடன் நேரத்தை செலவிடுங்கள், அவர் உங்கள் வாழ்க்கையில் செய்கிற, செய்த காரியங்களுக்காக நன்றியுடன் இருங்கள். அவருடன் உண்மையான உறவைக் கொண்டிருங்கள்.


ஜெபம்

தேவனே, வெளிப்புற தோற்றத்தைப் பற்றிய, உம்முடைய மனப்பான்மையைப் பெற எனக்கு உதவி செய்யும். நான் நினைக்கிற விதத்தில் ஆடை அணியாத மற்றவர்களைத்  நியாயந்தீர்க்காமலிருக்க எனக்கு உதவும். உம்முடன் ஒரு உறுதியான உறவை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon